பூஜை பாத்திரங்கள் பளபளக்க வீட்டு குறிப்பு

poojai-pathiram
- Advertisement -

நம் வீட்டு பூஜை பாத்திரங்களை எண்ணெய் பிசுக்கு போக, கருப்பு நிறம் நீங்க, தேய்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சில பேருக்கு பூஜை பாத்திரங்களை அழுத்தி தேய்த்தால் கைவலி வந்துவிடும். நகங்களில் சொத்தைக்கூட விழத் தொடங்கி விடும்.

பூஜை அறையில் இருக்கும் வெள்ளி பாத்திரம், பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரங்களை எல்லாம் பளபளக்க வைக்க, நம் வீட்டிலேயே ஒரு பவுடரை தயார் செய்யலாம். எந்தெந்த பொருட்களை சேர்த்து இந்த பவுடரை தயார் செய்வது, இந்த பவுடரை வைத்து எப்படி பூஜை பாத்திரங்களை தேய்ப்பது என்பதை பற்றிய ஒரு பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை தேய்க்க பொடி தயார் செய்யும் முறை

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். கோதுமை மாவு – 1/4 கிலோ, சபீனா பவுடர் – 1/4 கிலோ, துணி துவைக்கும் பவுடர் – 100 கிராம், லெமன் சால்ட் – 100 கிராம், தூள் உப்பு – 100 கிராம், ஆப்ப சோடா – 100 கிராம், செம்மண் – 100 கிராம், இந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கோங்க. இதில் குறைந்த அளவு தேவை என்றால் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் பாதி பாதியாக குறைத்து கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். இதில் செம்மண்ணை மட்டும் சலித்து நைசாக இருக்கும் பொடியை சேர்க்கவும்.

இந்த எல்லா பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஈரம் இல்லாத ஒரு ஸ்பூனை வைத்து கலந்து, ஒரு காற்று போகாத பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், தேவையான போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சின்ன கிண்ணத்தில் கலந்து வைத்திருக்கும் பொடியை போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை உங்கள் கையால் தொட்டு லேசாக பூஜை பாத்திரங்களை தேய்த்தாலே போதும். அதில் இருக்கும் எண்ணெய் பிசுப்பு, கருப்பு எல்லாம் நீங்கிவிடும். தேவைப்பட்டால் லேசான ஸ்பாஞ் நாரில் இந்த கலவையை தொட்டு பூஜை பாத்திரங்களை தேய்த்துக் கொள்ளவும்.

பிறகு இந்த பூஜை பாத்திரங்களை நல்ல தண்ணீரில் கழுவி உடனடியாக ஒரு துணி போட்டு துடைத்து விட்டு, மேலே விபூதியை பூசி, துடைத்து எடுங்கள். பூஜை பாத்திரம் புதுசாக வாங்கிய பூஜை பாத்திரம் உங்கள் போல பளபளக்கும். பின்பு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு மாதத்திற்கு இந்த பூஜை பாத்திரங்கள் மீண்டும் கருத்து போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொடியை வெள்ளி பாத்திரங்கள் தேய்க்க, பித்தளை பாத்திரங்கள் தேக்க, செம்பு பாத்திரங்கள் தேக்க, பயன்படுத்தலாம். அதேபோல எப்போதுமே நீங்கள் எந்த முறையில் பூஜை பாத்திரங்களை தேய்த்து கழுவினாலும் அதை உடனடியாக ஒரு துணியை வைத்து துடைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சமையல் பாத்திரங்கள் மின்ன எளிய வழி.

அப்போதுதான் அந்த பூஜை பாத்திரம் மீண்டும் கருத்து போகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படித்தான் பூஜை பாத்திரம் தேய்க்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இப்படியும் ஒரு வழி இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் என்பதற்காக தான் இந்த வீட்டு குறிப்பு. தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -