கார்த்திகை தீபத்தன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

annamaliyar
- Advertisement -

செய்த பாவத்துக்கு எல்லாம் தீர்வு கிடைக்க ஏதாவது ஒரு வழி கிடைக்காதா, என்று தேடித்தேடி பரிகாரங்களை செய்கின்றோம். நாம் செய்த பாவத்துக்கு முக்தி கிடைக்க, முத்திக் கொடுக்க, அந்த எம்பெருமானால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான நாள் தான் இந்த கார்த்திகை தீப திருநாள்.

இந்நாளில் சிவபெருமானை வழிபாடு செய்து, முருகப்பெருமானை வழிபாடு செய்து, வீட்டில் இருக்கும் இருள் எல்லாம் நீங்க, நம் மனதில் இருக்கும் இருளெல்லாம் நீங்க, வீடு முழுவதும் பிரகாசமாக தீப ஒளியால் அலங்கரிப்போம். இந்த தீப சுடரில் நாம் செய்த பாவங்களை எல்லாம் போட்டு பொசுக்க, அந்த எம்பெருமானின் பாதங்களில் முக்தி கிடைக்க, இந்த தீபத்திருநாளில் நம்முடைய வீடுகளில் உச்சரிக்கப் பட வேண்டிய மந்திரங்கள் என்னென்ன.

- Advertisement -

ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிறப்பான தகவலை தெரிந்து கொண்டு, குடும்பத்துடன் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் செய்த பாவங்கள் தீரும் என்று திருஞானசம்பந்தரால் சொல்லப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை தீபத்தன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த வருட கார்த்திகை தீபம் ஆனது 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கிறது. திருக்கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றும் போது ‘ஓம் அண்ணாமலையானே போற்றி போற்றி, ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு உங்கள் வீட்டில் தீபம் ஏற்ற தொடங்கினால், உங்கள் பிறவிக் கடன் அடையும். இந்த தீபத் திருநாளில் அண்ணாமலையாரை நீங்கள் வணங்கினால் போதும். உங்களுடைய பாவம் எல்லாம் நீங்கள் ஏற்றக்கூடிய விளக்கில் சாம்பலாக போய்விடும்.

- Advertisement -

திருக்கார்த்திகை தீபத்தன்று தொலைக்காட்சிகளில் திரு அண்ணாமலையில் தீபம் ஏற்றக்கூடிய அந்த காட்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்கிறார்கள். அண்ணாமலையாரின் அந்த தீபத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அதன் பிறகு உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவது சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றும் போது பின் சொல்லக்கூடிய இந்தப் பாடலை உச்சரித்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. தினமுமே வீட்டில் விளக்கு ஏற்றும் போது நமச்சிவாய மந்திரத்தை சொல்லி, இந்த பாடலை உச்சரியுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வீட்டில் இருக்கும் இருள் நீங்கும்.

- Advertisement -

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே

இந்த தீபத்திருநாளில் சிவபெருமானை மட்டும் வழிபாடு செய்வது விட்டு முருகனை மறக்க முடியுமா. அந்த முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்வதிலும் சிறப்பு தான். ஜோதி வடிவில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு திருப்புகழில் ஒரு பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாடல் இதோ உங்களுக்காக. இன்றைய தினம் விளக்கு ஏற்றி முடித்துவிட்டு முருகப்பெருமானை நினைத்து இந்த பாடலை உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருள் ஆசியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனை ஜோதி வடிவில் வழிபாடு செய்ய திருப்புகழ் பாடல்

பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் – பெருமாள்காண்

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் – பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் – பெருமாள்காண்

செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப்  – பெருமாள்காண்

ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் – பெருமாள்காண்

உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் – பெருமாள்காண்

கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் – பெருமாள்காண்

கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் முறை

வரக்கூடிய தீபத்திருநாளில் நீங்கள் செய்த பாவத்திற்கு விமோசனம் கிடைக்க இந்த பாடல்கள் நிச்சயம் உங்களுக்கு வழியை காட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ஓம் அண்ணாமலையானே போற்றி போற்றி.

- Advertisement -