கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் முறை

mahalakshmi dheepam
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். இந்த கார்த்திகை மாதமானாது தீபத்திற்குரிய மாதமாகவே கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் ஒவ்வொரு விசேஷ பலனை தரக் கூடியது. அந்த வகையில் கார்த்திகை தீபத்தன்று நாம் ஏற்றும் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும். அதனால் என்ன பலன் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகை தீபத்தன்று ஏற்ற வேண்டிய தீபம்

தீபத்திருநாளாம் கார்த்திகை அன்று தீபத்தின் ஒளியாலே வீடு நிறைந்து இருக்கும். மாதங்களிலே எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கார்த்திகைக்கு உண்டெனில் அது இந்த தீபத்தினால் காரணம் தான். ஏனெனில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது மட்டும் இன்றி கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் உமா மகேஸ்வர பூஜை அத்தனை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மட்டும் இன்றி கார்த்திகை மாதம் முழுவதிலும் நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் நம் குடும்பம் செல்வ செழிப்புடன் வழி வகுக்கும் என்பதால் தான் இந்த மாதத்தில் இத்தனை தீபங்கள் ஏற்ற நம் முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுத்தி இருக்கிறார்கள்.

கார்த்திகை தீபத்தன்று காலையிலே வீட்டு வாசலில் ஒரு தீபத்தை நிச்சயம் ஏற்றி விட வேண்டும். தீபத்தன்று ஏற்ற வேண்டிய விளக்குகள் 27, 54, 108 என்கிற எண்ணிக்கையில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபம் இரட்டை படையில் வருவது போல் ஏற்றக் கூடாது. அதில் கவனமாக இருங்கள். அடுத்து தீபத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய் சுத்தமான நல்லெண்ணையாக இருப்பது நல்லது. பூஜை அறையில் மட்டும் நிச்சயம் ஒரு நெய் தீபமாவது ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதே போல் இந்த தீபம் படிகளில் ஏற்றுவது மிக மிக முக்கியம். ஏனெனில் ராகு கேதுக்கான தீபமாக இதை கருதப்படுகிறது. ஆகையால் படி உள்ளவர்கள் நிச்சயம் படிகளில் தீபத்தை ஏற்ற வேண்டும். அதே போல் சமையலறை, படுக்கையறை, போன்ற அனைத்து அறைகளிலும் நிச்சயம் தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அன்றைய தினத்தில் குத்துவிளக்கின் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபட வேண்டும். அன்றைய தினத்தில் ஏற்றப்படும் இந்த தீபமும் மகாலட்சுமி தாயாரின் பூஜையும் இந்த 11 மாதங்களும் நீங்கள் தீபம் ஏற்றி வழிபட்டதற்கான பலனை தருவதோடு, வீட்டில் பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும். இந்த குத்து விளக்கு தீபத்தை கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றி வழிபாடு செய்தால் அமோகமான பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர பரணி தீபம்

அதுமட்டுமின்றி கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி என்று ஏற்றப்படும் மோட்ச தீபம் நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற வழிவகுக்கும். இத்தனை சிறப்புமிக்க இந்த திருக்கார்த்திகையில் இப்படி தீபம் ஏற்றி இந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் நம் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -