கார்த்திகை தீபத்தன்று இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு நிச்சயம் சொந்த வீடு வாங்குவதற்கான நேரம் காலம் கை கூடி வந்துவிடும்.

veedu1
- Advertisement -

இந்த வருடம் கார்த்திகை தீபம் 06-12-2022 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரவிருக்கின்றது. இந்த வருட கார்த்திகை தீப திருநாளை யாரும் தவற விடாதீர்கள். கார்த்திகை தீபத்தன்று பின் சொல்லக்கூடிய பரிகார விளக்கை ஏற்றினால் நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கைக்கூடி வரும். ஜாதகத்தில் சொந்த வீடு வாங்குவதற்கு யோகமே இல்லை என்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். அப்படி இந்த கார்த்திகை தீபத்தன்று என்னதான் சிறப்பு இருக்கு என்பதை பற்றியும், அந்த பரிகார விளக்கத்தை எப்படி ஏற்றுவது என்பதை பற்றியும் சுருக்கமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பொதுவாகவே கார்த்திகை தீபம் என்றால் அது கிருத்திகை நட்சத்திரத்தோடு சேர்ந்து தான் வரும். அது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த வருட கார்த்திகை தீபம், கார்த்திகை நட்சத்திரத்தோடு சேர்ந்து முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க்கிழமை அன்றே வருகிறது. 6 என்பது முருகப்பெருமானுக்கு உரிய எண். இந்த ஆறாம் தேதியே கார்த்திகை தீபம் வந்திருப்பதால், இந்த கார்த்திகை தீபம் மிக மிக சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு 6 தீபம் ஏற்றுவது சிறப்பு தானே. அதிலும் இந்த கார்த்திகை தீபத்தன்று வந்திருக்கும் இந்த நன்னாளை நாம் தவற விடலாமா.

- Advertisement -

இந்த பரிகார தீபத்தை கோவிலில் ஏற்ற வேண்டும். முருகன் கோவிலில் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். கோவிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பவர்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றலாம். உங்களுடைய வீட்டில் அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவில், முருகன் சன்னிதானம் இருக்க கோவிலிலும் இந்த விளக்கை ஏற்றலாம். புதியதாக 6 மண் அகல் விளக்குகளை வாங்கி தண்ணீரில் ஊற வைத்து காய வைத்து, மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, தயார் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்குகளை கோவிலுக்கு எடுத்துச் சென்று சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி முருகப்பெருமானின் நோக்கி வைக்க வேண்டும்.

நெய் தீபம் தான் கட்டாயம் முருகன் கோவிலில் ஏற்றப்பட வேண்டும். முருகப்பெருமானுக்கு அரளி புஷ்பங்களை வாங்கி கொடுத்து உங்களது பெயரைச் சொல்லி சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முழு மனதோடு ஆழமாக வையுங்கள். தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து கொண்டு வீடு திரும்பலாம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இல்லை வீட்டில் தான் இந்த தீபத்தை ஏற்ற முடியும் என்றாலும் முருகப்பெருமானின் திரு உருவப்படத்திற்கு முன்பு, மிருகப் பெருமானை பார்த்தவாறு வரிசையாக ஆறு மண் அகல் விளக்குகளை அடுக்கி வைத்து, நெய் தீபம் ஏற்ற வேண்டும். உங்கள் வீட்டில் கிழக்கு பார்த்தவாறு முருகப்பெருமான் இருந்தால், மேற்கு பார்த்தவாறு தீபங்கள் எல்லாம் எரிய வேண்டும். வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு அரளி பூவை வாங்கி போட்டு ஒரு தேங்காய் உடைத்து நெய்வேத்தியம் வைத்து மனதார சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த விளக்கை மாலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஏற்றலாம். நம்பிக்கையோடு கார்த்திகை தீபத்தன்று ஒருநாள் இந்த விளக்கை ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயமாக சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -