கார்த்திகை தீபம் அன்று இத்தனை எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் தீபத் திருநாளின் முழுபலனையும் பெற முடியும்

karthigai
- Advertisement -

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதம் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த முருகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இந்த கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு வாய்ந்த பூஜைகள் செய்வதுடன், பல பரிகாரங்களும் கார்த்திகை மாதத்தில் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 19. 11. 2021 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் வீடுகள் முழுவதும் அகல் விளக்கு ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இப்படி ஏற்றப்படும் தீபங்களை சரியான எண்ணிக்கையில் ஏற்றி வழிபடுவதன் மூலம் தீபத் திருநாளின் முழுபலனையும் பெறமுடியும். வாருங்கள் அப்படி தீபம் ஏற்றும் முறையையும், அவற்றின் எண்ணிக்கை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

karthigai

கார்த்திகை தீபம் அன்று நெல் பொரியுடன் அவல் பொரியையும் வெல்லப்பாகில் சேர்த்து சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களின் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலையாகும். தமிழகத்தின் வீடுகள் முழுவதும் விளக்கு ஒளியால் நிரப்பப்பட்டிருக்கும். விளக்குகளின் ஒளி புற இருளை அகற்றும். ஈசனின் நினைவு அக இருளை அகற்றும்.

- Advertisement -

கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்ச லோக திரி போட்டு, தீபம் ஏற்றப்பட்டு, வீடுகள் முழுவதும் அலங்கரிக்கப்படுகிறது. இப்படி ஏற்றப்படும் தீபங்கள் சரியான எண்ணிக்கையில் ஏற்ற படுகிறதா என்று பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் தீபம் ஏற்றுவதன் மூலம் சிறப்பு பலனை பெற முடியும்.

agal vilakku

அவ்வாறு பூஜை அறையில் 27 விளக்குகள் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அப்படி முடியாமல் போனால் குறைந்தது ஒன்பது விளக்குகள் ஏற்றினாலும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அடுத்ததாக வீட்டின் ஹாலில் 9 விளக்குகள் ஏற்றி அலங்கரிக்க வேண்டும். அடுத்ததாக சமையலறையில் ஏழு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து படுக்கை அறையில் 6 தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும். வீட்டின் வாசலில் குத்துவிளக்கு ஏற்றி 27 தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டின் ஐஸ்வர்யத்தை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தீபத் திருநாளன்று ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த செயல்கள் வெற்றியுடன் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும்.

karthigai-deepam

மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். ஐந்து முக தீபம் ஏற்றினால் சகல நன்மைகளும் உண்டாகும். இப்படி சகல செல்வங்களையும் பெற மூன்று நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். ஏற்றப்படும் விளக்கு குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களாவது தொடர்ந்து எரிய வேண்டும். அந்த நேரம் முழுவதும் வீட்டின் கதவு, ஜன்னல்கள் முழுவதுமாக திறந்து வைக்கப்பட வேண்டும். வீட்டில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் ஒளிர விடவேண்டும். இப்படி தீபத் திருநாளை விளக்கு ஏற்றி ஒளிர விட்டு உங்கள் வாழ்வும் ஒளி மயமாக வாழ்த்தி விடைபெறுகிறோம்.

- Advertisement -