- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகார்த்திகை தீபத்தன்று ஏற்ற வேண்டிய முக்கியமான தீபம்

கார்த்திகை தீபத்தன்று ஏற்ற வேண்டிய முக்கியமான தீபம்

- Advertisement -

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து கார்த்திகை தீபமும் வரவிருக்கிறது. வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொள்வோம். கட்டாயம் நாளைய தினம் அனைவரும் மண் அகல் விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி வைத்து தீப ஒளியில் அந்த அண்ணாமலையானை மனதில் நினைத்து, வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைக்க முடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்யலாம். அல்லது எங்களால் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைக்க முடியும், இருந்தாலும் இந்த கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் இருக்கும் வறுமை முழுவதும் நீங்க வேண்டும், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால் பூஜை அறையில் எந்த தீபத்தை ஏற்றி வைப்பது? ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கார்த்திகை தீப விளக்கு பரிகாரம்

13-12-2024 வெள்ளிக்கிழமை காலை 6:51 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. 14-12-2024 காலை 4:56 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் துவங்கக்கூடிய நேரத்தில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் முடியக்கூடிய நேரம் வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு அகண்ட தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். பெரிய மண் அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

அது முழுவதும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொஞ்சம் தடிமனாக திரி போட்டுக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயில் 4 ஏலக்காய், 4 கிராம்பு, கொஞ்சம் சுருள்பட்டை பொடி, கொஞ்சம் பச்சை கற்பூர பொடியையும், அந்த விளக்கில் போட்டு, அந்த விளக்கானது உங்கள் வீட்டில் கார்த்திகை நட்சத்திரம் துவங்கும் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். இந்த தீபச்சுடரிலிருந்து வெளியேற்றப்படும் அந்த வாசத்தில் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறும். வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியேறும்.

- Advertisement -

அந்த காலத்தில் கார்த்திகை தீபத்திற்கு தான் வெடி வெடிப்பது வழக்கம். இப்போதெல்லாம் தீபாவளிக்கு வெடி வெடிக்கின்றோம். ஏற்றி வைத்திருக்கும் தீபத்திலிருந்து வெளிவரும் ஒளியும், அந்த பட்டாசிலிருந்து வெளிவரக்கூடிய ஒலியும் சேர்ந்துதான் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஒலி, ஒளி கெட்ட சக்திக்கு பிடிக்காது. அதாவது வெளிச்சமும் கெட்ட சக்திக்கு பிடிக்காது, வெடி சத்தமும் கெட்ட சக்திக்கு பிடிக்காது, மிரண்டு கெட்ட சக்திகள் ஓடிவிடும்.

கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் விளக்கு வைக்க முடியாதவர்கள், இதுபோல ஒரு விளக்கை பூஜை அறையில் ஏற்றுங்கள். கார்த்திகை நட்சத்திரம் துவங்கும்போது இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்க வேண்டும், அந்த கார்த்திகை நட்சத்திரம் முடியும் நேரம் வரை, ஏற்றி வைத்த விளக்கை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எம பாதகம் நீக்கும் பரணி தீபம்

இவ்வளவுதான் நீங்கள் வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்திருந்தாலும் இந்த தீபத்தை பூஜையறையில் ஏற்றி வைக்கலாம். ரொம்ப ரொம்ப நல்லது. அந்த அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறையாது என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்