கார்த்திகை மாத ராசிபலன்

Karthigai madha rasi palan

மேஷம்

Aries zodiac sign

எதிலும் வெற்றியைத் தேடித் தரும் மாதமாக இது அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு குடும்பச் சூழல் மகிழ்ச்சி தருவதாக அமையும்.

ரிஷபம்

Taurus zodiac sign

மாதத்தின் முன்பகுதி சுமாராக இருந்தாலும், பிற்பகுதியில் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரவு சீராக இருக்கும். முன்னேற்றத்தில் எந்த தடையும் இருக்காது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ள பெண்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்

Mithunam Rasi

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க கூடிய மாதம் இது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்தில் எந்த தடையுமில்லை. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவர். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் கூடும்.

கடகம்

Kadagam Rasi

அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட போகும் மாதம் இது. எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ள பெண்களுக்கு கணவரின் அன்பும், கணவர் வழி உறவினால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

simmam

உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எதையும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடையே வாக்குவாதம் வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெண்களுக்கு பல வகையிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இது அமையும்.

கன்னி

Kanni Rasi

மகிழ்ச்சியான மாதமாக உங்களுக்கு இந்த மாதம் அமையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் எளிதில் வெற்றி பெறும். எதிர்பார்த்த அளவு பணவரவு இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம் தேவை. குடும்பத்தில் உள்ள பெண்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

Thulam Rasi

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளிலும் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரக்கூடும். குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு சீராக இருக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே அமையும்.

விருச்சிகம்

Virichigam Rasi

நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியில் முடியும். பணவரவு சீராக இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகி மறையும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சற்று சிரமம் இருக்கும் பொறுமையாக இருப்பது நல்லது.

தனுசு

Dhanusu Rasi

உங்கள் பண வரவு சீராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. படிப்பில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மகிழ்ச்சி தரும் மாதமாக இது அமையும்.

மகரம்

Magaram rasi

உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகமும் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகளுக்கு கணவனிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவாக முடியும்.

கும்பம்

Kumbam Rasi

உங்கள் தேவைகளுக்கான பணவரவு உங்களை வந்து சேரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களான உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

மீனம்

Meenam Rasi

நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மனைவியின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய காலம் இது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.

மாத பலன்கள் முழுவதையும் தொடர்ந்து படிக்க எங்களோடு இணைந்திருங்கள்