கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்களும்! வழிபாடுகளும்! இந்த மாதத்தில் இதெல்லாம் கூட செய்யலாமா?

murugar
- Advertisement -

மாதங்களில் கார்த்திகை மாதத்தில் மட்டும் தான் மாதம் முழுவதும் விரதங்களும், வழிபாடுகளும் அனுஷ்டிக்க படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியும் கார்த்திகை மாதத்தில் அரும்பெரும் பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத மாதமாக இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய முக்கிய நாட்களில் எந்த மாதிரியான வழிபாடுகள் செய்தால்! என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

முதலில் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குற்றால நாதரை வணங்கி, குற்றாலத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அத்தனையும் அழிந்து போகும். மேலும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய துவாதசி நாளில் ஏழை எளியவர்களுக்கு நீங்கள் அன்னதானம் செய்து வந்தால் கங்கையில் ஆயிரம் பேருக்கு சோறு போட்ட பலன் உங்களுக்குக் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவிலுக்கு சென்று அங்குள்ள விஷ்ணு பகவானுக்கு நேர் எதிராக அமர்ந்து பகவத் கீதை வாசித்தால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -

கார்த்திகை மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரிசையாக வீட்டில் தீபங்களை ஏற்றி வைத்து பூஜித்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும் என்று புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் லக்ஷ்மி தேவிக்கு பூஜை செய்து வந்தால் நீங்கள் இழந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் அடைவதாக ஐதீகம் உண்டு. பஞ்சமி திதியில் நாக தோஷ நிவர்த்தி செய்து கொள்ள நல்ல நாளாக இருக்கின்றது எனவே கார்த்திகை மாதம் பஞ்சமி திதி அன்று நாகத்திற்கு உரிய பூஜைகளை செய்து பயன் அடையலாம். கார்த்திகைத் திருநாள் அன்று சிவனுக்கு நைவேத்தியமாக நெற்பொரியை வைத்து வழிபட்டு வர மோட்ச கதி பெறலாம்.

Murugan kovil

மேலும் கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம், ஞாயிறு விரதம், சஷ்டி விரதம், வளர்பிறை துவாதசி விரதம், உமா மகேஸ்வர விரதம், ஏகாதசி, முடவன் முழுக்கு போன்ற பூஜைகளை மேற்கொண்டு பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நாயனார்களின் குரு பூஜையும் இம்மாதத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வரும். கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியில் சந்திர பகவான் ரிஷப ராசியில் முழுவதுமாக இருப்பதால் ஆறு, குளம், ஏரி என்று அனைத்து நீர் நிலைகளும் தெய்வீக ஆற்றலை பெறுகின்றன எனவே நீர் நிலைகளில் இம்மாதத்தில் நீராடி வர நீங்கள் செய்த தீமைகளும், பாவங்களும் ஒழியும்.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் நீங்கள் செய்யும் எந்த ஒரு தானத்திற்கும் 2 மடங்கு பலன்கள் கிடைக்கும் எனவே இம்மாதத்தில் உங்களால் முடிந்த எந்த ஒரு தானத்தையும் இல்லாத மற்றும் இயலாதவர்களுக்கு செய்து உதவுங்கள். மேலும் நெல்லிக்கனி தானம் கொடுத்தால் உயர் பதவிகளை எல்லாம் அடையலாம் என்கிற ஐதீகமும் உண்டு. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மற்றும் திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் வரும் வேளையில் பிரபஞ்சத்தின் சக்தி அதிகரிக்கும் எனவே இந்த நாட்களில் விரதங்கள் இருந்து உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நற்பலன்களை அடையலாம்.

கார்த்திகை பவுர்ணமியில் கிரிவலம் வர எல்லா நன்மைகளும் உண்டாகும். நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும். பல தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் திருவண்ணாமலையை கிரிவலம் வந்துள்ளனர். இந்திரன், வருணன், வாயு, குபேரன், எமன், விஷ்ணு பகவான், மகாலட்சுமியும் கூட திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து உள்ளனர் எனவே அத்தகைய அரும்பெரும் மகத்துவங்கள் கொண்ட அண்ணாமலையில் கார்த்திகையில் கிரிவலம் சென்று வாருங்கள் எல்லா நலன்களும் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -