இன்று கார்த்திகை சோமவாரம். சிவபெருமானை நினைத்து இந்த பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். தீராத கடனும் தீரும்.

shiva-lingam
- Advertisement -

சிவபெருமானுக்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை விரதமிருந்து, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும். கடன் சுமை குறையும். அதுமட்டுமல்லாமல் இந்த ஜென்மத்தில் நாம் பெற்றிருக்கும் பிறவி கடனையும் அடைத்து விடலாம். மோட்சத்தை அடையலாம். கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்கு உரிய மாதம் என்றுதான் நாம் எல்லோரும் நினைத்திருக்கிறோம். ஆனால் இந்த மாதத்தை ஹரிஹர மாதம் என்றும் சொல்லுவார்கள். கார்த்திகை மாதம் விரதம் இருக்கும் போது சிவபெருமானை மட்டுமல்ல, பெருமாளையும் மனதார நினைத்து வழிபாடு செய்யவேண்டும். ஹரியும் ஹரனும் ஒன்று என்பதற்காக இந்த வழிபாட்டு முறை நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

crystal-lingam2

இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் குபேரனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற முடியும் என்று சிவ புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. குபேரருக்கு, குபேர சம்பத்து கிடைப்பதற்கான ஆசீர்வாதத்தை வழங்கியவர் ஐஸ்வர்ரேஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதன் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்படிக லிங்கத்தை வாங்கி வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் வறுமை இருக்காது. மிக சிறிய அளவிலான ஸ்படிக லிங்கங்கள் கிடைக்கின்றன. அதை பூஜை அறையில் வாங்கி வைக்கலாம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் ஸ்படிகலிங்கம் இருந்தால் அந்த லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தும், சந்தன குங்குமப் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வில்வ இலையால் இன்று அர்ச்சனை செய்ய வீட்டில் ஐசுவர்யா கடாட்சத்திற்க்கு ஒருபோதும் குறைவு இருக்காது. சரி, எல்லோர் வீட்டிலும் இந்த ஸ்படிக லிங்கம் இருக்காது. ஸ்படிகலிங்கம் இல்லாதவர்கள் என்ன செய்வது. மஞ்சளில் சிவலிங்கம் பிடிக்கலாம். விபூதியில் சிவ லிங்கம் பிடித்து வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபாடு செய்யலாம்.

runavimosana-lingam

சிவனுக்கு உகந்த நேரம் என்றால் அது பிரதோஷம் நேரம் தான். கார்த்திகை மாதம் சோமவார தினத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இன்றைய தினம் சிவபெருமானை நினைத்து கடன் தீர்வதற்கு எனது தானம் செய்வது.

- Advertisement -

2 வெற்றிலை, 2 கொட்டை பாக்கு, 2 நெல்லிக்காய், 2 விரலி மஞ்சள், வாசனை மிகுந்த பூ, இந்த பொருட்களை ஒன்றாக தாம்புல தட்டில் வைத்து கோவிலில் இருக்கும் புரோகிதருக்கு அதாவது ஐயருக்கு தானமாக கொடுக்க வேண்டும். கார்த்திகை சோமவார தினத்தில் இந்த தானத்தை நாம் செய்தால் நம்முடைய பிறவிக்கடனோடு சேர்ந்து இருக்கும் இந்த ஜென்மத்தில் வாங்கியிருக்கும் கடனும் படிப்படியாக குறையும் என்று கார்த்திகை புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

nellikai

உங்களால் முடிந்தால் மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு நெல்லிக்கனியை வாங்கி தானமாக கொடுக்கலாம். 15, 21, 51 என்ற கணக்கில் உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த நெல்லிகாய் தானம் கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பதும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஒரு பொருள். இந்த பொருளை இன்றைய தினம் சிவபெருமானையும் விஷ்ணு பகவானையும் நினைத்து தானம் செய்யும்போது நம்முடைய வீட்டிற்கு வறுமை என்பதே இருக்காது. நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். கடன் சுமை குறையும். வாழ்வில் செல்வ வளங்கள் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தானத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -