கார்த்திகை தீபத்தன்று இந்த மந்திரத்தை சொன்னால் மறுபிறவியே கிடையாதாம்

DEEPAM1

10.12.2019 இன்று கார்த்திகை தீபத்தின் முதல் நாள் தொடங்கப்படுகிறது. இந்த தீப திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும். மாலை நேரங்களில் ஏற்றப்படும் அகல் தீப விளக்கு இந்த நாளில் சிறப்பாக கருதப்படுகிறது. தீபத்தை ஏற்றும்போது உச்சரிக்கப்பட வேண்டிய கார்த்திகை மஹா தீப மந்திரம் இதோ:

DEEPAM

கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

இதன் பொருள்

இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த கார்த்திகை தீப ஒளியானது மோட்சத்தை தரும். புழு, பூச்சி, கொசு போன்ற சிறிய உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் மீதும் இந்த தீப ஒளியானது பட்டால் மற்றொரு பிறவி என்ற துன்பம் இல்லாமல் வாழலாம். நம் வாழ் நாள் தோறும் நிம்மதி அடைந்து சந்தோஷத்துடன் இருக்கலாம் என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது.

vilaku

- Advertisement -

மலைமேல் ஜோதிவடிவாக உள்ள சிவனை தரிசிப்பதே உசிதம் என்றாலும் நாம் வீட்டில் ஏற்றும் தீபத்தில் சிவ ஜோதியை கண்டு ஆனந்தம் கொண்டு அவரின் அருள் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
கர்ப்பிணி பெண்களுக்கான கர்பரக்ஷாம்பிகை மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karthigai deepa mantra in Tamil. Karthigai deepa mathiram. Karthigai deepa slogam in Tamil. Karthigai deepa Stotram in Tamil.