48 நாட்கள் விரதம் இருந்த பலனை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமானால், இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். உங்களின் வருங்கால சந்ததியினர் கூட செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

Sabarimala temple opening dates
Sabarimala temple opening dates
- Advertisement -

கார்த்திகை மாதம் என்பது ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை பயணத்திற்கு தயாராகும் மாதம். இந்த மாதம் ஐயப்பனுக்கு மட்டுமல்ல முருகருக்கும் தைப்பூசத்திற்கு விரதம் இருந்து செல்பவர்களும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் மாலை அணிவார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் என்பது பக்தி நிறைந்த மாதமாக தான் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் மாலை அணியும் பக்தர்கள் அவர்கள் இருக்கும் விரத முறைகளை சிலவற்றை கடைபிடித்தவர்களுக்கு இந்த விரதத்தின் பலன் முழுமையாக கிடைக்கும் அது என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம்.

மாலை அணிவது விரதம் இருப்பது அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்பதுயெல்லாம் ஓரளவிற்கு தெரிந்த விஷயம் தான். மாலை போட்டு இருக்கும் இந்த சமயத்தில் நாம் செய்யும் ஒரு செயலால் நமக்கும் நம் சந்ததிக்கும் கூட நன்மை பயக்கும் அது என்ன என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பொதுவாக மாலை அணிந்த விரத நாட்கள் என்பது 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம். சில மருத்துவ முறைகளில் கூட நமக்கு வழங்கும் மருந்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட சொல்லுவார்கள். ஒரு மண்டலம் என்பது நம் உடல் அதை ஏற்று அதற்கான வேலையை சரியாக செய்ய அத்தனை நாட்கள் ஆகும். இந்த மாலையும் அதே போல் தான் மாலை போட்டதிலிருந்து 48 நாட்கள் நாம் அந்த விரதம் முறையை கடைப் பிடிக்கும் போது 48 நாட்கள் நம் செயல் எண்ணம் எல்லாம் தூய்மை அடைந்து உள்ளன்புடன் அந்த இறைவனை காண நம்மை தயார் படுத்தி கொள்ள நமக்கு உள்ள கால அவகாசம் தான் இந்த 48 நாட்கள். இந்த நாட்களில் எப்படி நம் ஆசை, கோபம், மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு உள்ளத்தூய்மையுடன் இருக்கும் பழக்கத்தை நம் உடலும் மனதும் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக அவகாசம் தான் இந்த 48 நாட்கள். இந்த பழக்கத்தை அப்படியே நாம் தொடர்ந்து நம் வாழ்வில் கடைபிடிக்க பிடிப்பது தான் இந்த ஐயப்ப விரதத்தின் முழு சாராம்சமே.

இந்த விரத நாட்களில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றும் முறையை பின்பற்றினால், பக்தி நிறைந்த இந்த மாதத்தில் தெய்வங்களின் அத்தனை அனுகிரகங்களும் இந்த பிரம்ம முகூர்த்த நேரங்களில் அதிகமாக இருக்கும். இதோடு ஒரு புதிய அகல் வாங்கி கொள்ளுங்கள், உங்களுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். இந்த தீபம் அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டும் அதுவும் புதிய அகலில் தான் ஏற்ற வேண்டும். இந்த அகல் தீபம் ஐந்து தீபமாக ஏற்றினால் மிகவும் நல்லது.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றும் நாட்களில் தினமும் இல்லாதவர்களுக்கு ஒரு வேலை உணவையாவது தானம் செய்யுங்கள். இப்படி வாங்கி தர முடியாதவர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு ஒரு பிஸ்கெட் வாங்கி கூட போடலாம். அதாவது விரதம் இருக்கும் இந்த நாட்களில் தினமும் ஒருவருக்கு பசியாற்ற தானம் செய்ய வேண்டும் இது தான் முக்கியம். இதனால் உங்கள் விரதத்தின் பலனை நீங்கள் மட்டுமல்ல உங்கள் எதிர்கால சந்ததியினர் கூட அனுபவிப்பார்கள். உங்களின் அடுத்த தலைமுறை கூட செல்வ செழிப்புடன் வாழும் யோகம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கோடி கோடியாக பண மழையை கொட்டி தரும் ஒரே தீபம், இந்த தீபம் தான். இந்த விளக்கை 48 நாள் ஏற்றிவிட்டால் உங்களுக்கு பணம் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதை மாலை அணிந்தவர் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. மாலை அணியாதவர்கள் பெண்கள் என அனைவரும் இந்த மாதத்தில் விளக்கு ஏற்றலாம்.

- Advertisement -