கருட புராணம் கூறும் தானம் செய்வதற்கான பலன்கள்

புராணங்களில் 18 வகையான புராணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கருடபுராணம் எனப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணனின் வாகனமாக இருப்பவர் கருடன். மகாவிஷ்ணு சொல்ல சொல்ல அதை கருடன் கேட்ட புராணம் ஆதலால் கருடபுராணம் என்று அழைக்கப்படுகிறது. கருடபுராணம் வைணவத்தை சார்ந்தது. மரணத்திற்குப்பின் என்ன நடக்கிறது? ஆத்மாக்கள் எங்கே போகின்றன? உண்மையில் ஆத்மாக்கள் இருக்கிறதா? இல்லையா? அங்கே உயிர்வதை நடைபெறுவது உண்மையா? இல்லையா? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? அங்கு என்ன நடக்கிறது? ஈமச் சடங்குகள் நடத்துவது எதனால்? என்கின்ற பல விசித்திரமான கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கருட புராணம். இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. இதை எழுதியவர் வேதவியாசர் என்பவராவார். இப்புராணம் தானம், தருமம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பிறப்பு-இறப்பு, தவம் என்று மனித வாழ்க்கைக்கு பயனுள்ள பல தகவல்களை கொண்டுள்ளது. மனித குலத்திற்கு கிடைத்த அற்புதமான புராணம் கருடபுராணம் என்று கூறினால் மிகையாகாது.

ஒருவர் கேட்க நாம் மனதார கொடை அளிப்பது தர்மம் ஆகும் ஆனால் நாமாகவே முன்வந்து ஒருவருக்கு மனதார கொடுப்பது தானம் எனப்படும். ஆகவே தர்மத்தை காட்டிலும் தானமே உயர்ந்தது. அத்தகைய தானம் அளிப்பவர் மனத்தூய்மையுடன் இருப்பது அவசியமான ஒன்றாக கருடபுராணத்தில் கருதப்படுகிறது. தானம் கொடுப்பவர் மட்டுமல்ல தானம் பெறுபவரும் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்பவராக மனத்தூய்மை உடையவராக இருந்தால் தான் தானம் கொடுத்தவருக்கு பலன் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. எந்த வகையான தானத்திற்கு நாம் இறந்த பின்பு எத்தகைய பலன்களை அனுபவிக்க முடியும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

1. புண்ணியத்தில் சிறந்த புண்ணியமாக கோ தானம் கருதப்படுகிறது. கோ என்றால் பசு. பசுவை தானம் அளிப்பதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை சொர்கபுரியில் அனுபவிக்கலாம்.

2. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சிலர் கூறுவார்கள். அத்தகைய அன்னதானம் அளிப்பவர்கள் தாம் விரும்பிய உலகத்தில் ஒரு வருட காலம் சுகம் அனுபவிக்கலாம்.

annadhanam 1

- Advertisement -

3. நிறைமாத பசுவை ஒருவருக்கு தானம் அளிப்பதன் மூலம் வைகுண்ட வாசத்தை கட்டாயம் அனுபவிக்கலாம்.

4. ஒருவருக்கு குடையை தானமாக அளிப்பதன் மூலம் வருண லோகத்தில் ஆயிரம் ஆண்டுகாலம் சுகம் அனுபவிக்கலாம்.

5. சந்திர லோகத்தில் சுகம் அனுபவிக்க நெய், கட்டில், மெத்தை, பாய், ஜமுக்காளம், தலையணை, தாமிரம் இதில் எதையாவது தானம் செய்ய வேண்டும்.

6. வாயு லோகத்தில் பத்தாயிரம் ஆண்டுகாலம் சுகம் அனுபவிக்க வஸ்திர தானம் கொடுக்க வேண்டும்.

blood donation

7. அக்னி லோகத்தில் சுகம் அனுபவிக்க உடல் தானம், ரத்த தானம், கண் தானம் முதலிய தானங்களை கொடுத்திருக்க வேண்டும்.

8. இந்திரலோகத்தில் இந்திரனுக்கு நிகராக அமர்ந்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமெனில் ஏதேனும் திருத்தலத்திற்கு யானையை தானமாக அளித்திருக்க வேண்டும்.

9. 14 இந்திரன் காலம் வரை வருண லோகத்தில் சுகங்களை அனுபவிக்க குதிரை மற்றும் பல்லக்கு தானமாக அளித்திருக்க வேண்டும்.

horse

10. ஒரு மன்வந்திரம் காலம் வாயு லோகத்தில் சுகங்களை அனுபவிக்க ஆலயத்திற்கு நந்தவனங்கள் கொடையாக கொடுத்திருக்க வேண்டும்.

11. மறு ஜென்மத்தில் தீர்காயுளும், அறிவாற்றலும் மிக்கவராக பிறக்க வேண்டுமெனில் நவரத்தினங்களையும், தானியங்களையும் தானமாக கொடுத்திருக்க வேண்டும்.

12. தானம் செய்யும் போது எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மனதார தானம் செய்தவர்களின் மரணம் உன்னதமாக இருக்கும். மேலும் அவர்கள் மறு பிறவி இல்லாத பெரு நிலையை அடையலாம்.

13. சூரிய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க நல்ல காரியங்களை மனதார விருப்பத்துடன் ஏற்று செய்திருக்க வேண்டும்.

14. சத்திய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

marriage

15. 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகங்களை அனுபவிக்க ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

16. குபேர லோகத்தில் ஒரு மன்வந்திரம் காலம் வரை சுகங்களை அனுபவிக்க பொன், வெள்ளி ஆபரணங்களை தானம் கொடுத்திருக்க வேண்டும்.

17. ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் சுகங்களை அனுபவிக்க கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து அந்த கஷ்டத்தில் இருந்து விடுவித்து இருக்க வேண்டும்.

money

18. ஜன லோகத்தில் நீண்டகாலம் சுகங்களை அனுபவித்து வாழ நீர் நிலைகளை உண்டாக்கி இருக்க வேண்டும் அல்லது நீர்நிலைகளை சீர்திருத்தி இருக்க வேண்டும். ஒரு குளத்தை உருவாக்கியவரை விட அதை சீர்படுத்துபவருக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

19. தபோ லோகத்தை அடைவதற்கு தேவையான, பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பாக வளர்த்திருக்க வேண்டும்.

20. 64 ஆண்டுகள் பரமபதத்தை அடைந்து சுகமாக வாழ புராண நிகழ்ச்சிகளை குறிக்கும் சிற்பங்கள் உடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றிருக்க வேண்டும்.

21. இந்திரலோகத்தில் பத்தாயிரம் ஆண்டு காலம் சுகமாக வாழ தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்தி இருக்க வேண்டும்.

22. இம்மையிலும் மறுமையிலும் ஒருவர் இன்பமடைய பவுர்ணமி தோறும் ஊஞ்சல் உற்சவம் செய்திருக்க வேண்டும்.

23. நல்ல கீர்த்தியுடன் திடகாத்திரமாக பிரகாசிக்க எள்ளை தானமாக தாமிர பாத்திரத்தில் கொடுத்திருக்க வேண்டும்.

24. கந்தர்வ லோகத்தில் இன்புற்று வாழ நல்ல கனிகளை தானம் கொடுக்க வேண்டும். ஒரு கனிக்கு ஒரு வருடம் வீதம் கணக்கு வைத்திருப்பர்.

25. கைலாச வாசம் வேண்டுமென்றால் நல்ல ஒழுக்கம் உள்ளவருக்கு ஒரு சொம்பு நிரம்ப நல்ல தண்ணீரை தானமாக அளித்திருக்க வேண்டும்.

26. 60000 ஆண்டுகள் பரமபதத்தில் சுகித்து இருக்க சூரியோதயத்தில் கங்கையில் நீராடி இருக்க வேண்டும்.

river ganga

27. 14 இந்திரா ஆயுட்காலம் வரை சொர்க்கத்தில் சுகமுடன் வாழ முழு பக்தியுடன் விரதம், நோன்பு போன்றவற்றை கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

28. சத்துருக்கள் இல்லாதவராக தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோமம் செய்திருக்க வேண்டும்.

29. 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வதற்கு சோடச மகாலட்சுமி பூஜை முறையோடு அனுஷ்டிக்க வேண்டும். அதனால் அவர்களது குலமே பெருமையுடன் விளங்கும்.

Mahalakshmi_1

30. புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவர்களும், இதை படிப்பவர்களும், கேட்பவர்களும் தனது கடைசி காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து சுகமுடன் வாழ்வார்கள். அவர்களது முன்னோர்கள் முக்தி பெற்று இன்புறுவர் என்கிறது கருட புராணம்.

மானிடராய் பிறந்தாலே ஏதாவது ஒரு தவறை செய்யாமல் இருக்கவே முடியாது என்ற நிலைதான் கலியுகத்தில் நிலவுகிறது. எத்தகைய உத்தமனாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் பாவம் செய்திருப்பான். நம்முடைய பாவங்கள், புண்ணியங்கள் மேலுலகத்தில் கணக்கு வைக்கப்படுகின்றன. நாம் தெரிந்தோ, தெரியாமலோ எவ்வளோ பாவங்கள் செய்திருப்போம். நம்மால் முடிந்த தான, தர்மங்களை செய்து அதன் கெடுபலன்களை குறைத்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
கடவுள் உங்கள் வீட்டில் இருக்கின்றார் என்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

English Overview:
Here we have Pavangal thera thanam. Thanam palangal in Tamil. Thanamum palangalum in Tamil. 30 types of thanam in Tamil.