கடவுள் உங்கள் வீட்டில் இருக்கின்றார் என்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

aarathijpg

கடவுளின் வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது கற்பூரம். அந்த காலங்களில் எல்லாம் மின்விளக்கு கிடையாது. சன்னதியின்‌ உள்பகுதியில் உள்ள இறைவனை மனிதர்கள் தரிசிக்க வேண்டுமென்றால் கற்பூர ஆரத்தியில் வரும் வெளிச்சத்தின் மூலம் தான் அந்த இறைவனை தரிசனம் செய்ய முடியும். கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காட்டும்போது இறைவனிடம் உள்ள நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி கற்பூரத்தில் உள்ளது. பின்பு அந்த ஆரத்தியானது நமக்கு காட்டப்படும் போது அதைத் தொட்டு நம் கண்களில் வைத்துக் கொள்கிறோம். அப்போது இறைவனிடம் உள்ள அந்த நல்ல ஆற்றலானது நமக்கும் வந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இன்றளவும் கூட மிகப்பழமையான கோவில்களின் மூலஸ்தானத்தில் மின்விளக்குகள் போடப்படுவதில்லை. இதனால் தான் நம் முன்னோர்கள் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காட்டும் வழக்கத்தை கொண்டுவந்தார்கள்.

karpooram

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த கற்பூரத்தில் மருத்துவ குணங்கள் மிக அதிகம். இந்த கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்துவிட்டு அதை நம் இருகைகளிலும் தொட்டு நம் கண்களில் ஒற்றிக் கொள்ளும்போது, நம் கைகளில் இருக்கும் அந்த இளம் சூடானது நம் கண்களின் மீது படும்போது நம் கண்களுக்கு நன்மை தரும் என்றும், கற்பூரவாசத்தினை நம் மூக்கில் சுவாசிக்கும் போது சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும் என்கிறது அறிவியல் சார்ந்த உண்மை. அறிவியலாக இருந்தாலும், ஆன்மீகமாக இருந்தாலும் அந்த இறைவனுக்கு கற்பூர ஆரத்தியே மிகவும் சிறந்தது.

இந்த கற்பூர ஆரத்தியை நீங்கள் இறைவனுக்கு காட்டும்போது எடுத்த உடனேயே மேல்ப்பகுதிக்கு சென்று விடக்கூடாது. இறைவனின் பாதம், முட்டி பகுதி, வயிற்றுப் பகுதி, மார்பு பகுதி, தலைப்பகுதி என்றுதான் படிப்படியாக அந்த இறைவனுக்கு கற்பூர ஆரத்தியை காட்ட வேண்டும். இப்படி காட்டும்போது நம் ஆழ்மனதில் அந்த இறைவனின் திரு உருவமானது பதிந்து நம் மனதிற்கு ஒரு நிம்மதியை அளிக்கும் என்கிறது சாஸ்திரம்.

aarathi

வீட்டில் இறைவனுக்கு கற்பூர ஆரத்தியை காண்பிக்கும் போது சிலசமயங்களில் சாமி படத்தின் மீது உள்ள பூக்கள் கீழே விழுந்துவிடும் அல்லது நம் பூஜை அறையில் வைத்து இருக்கும் எலுமிச்சை பழம் உருண்டு விடும். பல்லி சத்தம் போடும் அல்லது திடீரென்று ஏதாவது ஒரு சத்தம் நம் காதில் கேட்கும் சம்பவங்கள் ஏற்படும். இப்படி ஏதாவது நிகழ்ந்தால் அதை அபசகுணம் என்று நினைக்க வேண்டாம். கடவுளின் ஆசி உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் உள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம்.

- Advertisement -

aarathi

சில சமயங்களில் நாம் ஆரத்தி காட்டும்போது காற்றில் கற்பூரதீபமானது அணைந்து விடும். இது அபசகுணம் என்று நினைத்து பலர் வருத்தப்படுவதுண்டு. ஆனால் சாஸ்திரப்படி இதில் எந்த தவறும் இல்லை. கற்பூர தீபத்தை திரும்பவும் ஏற்றி அந்த இறைவனுக்கு கற்பூர ஆரத்தியை காட்டுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. தினம் தோறும் இறைவனுக்கு ஒரு சர்க்கரையாவது படைத்து கற்பூர ஆரத்தி காட்டும் போது நமக்கு ஏற்படும் மன அமைதியை மற்றவர்கள் சொல்லி உணரமுடியாது. அனுபவரீதியாக உணர்ந்தால்தான் அதன் மகத்துவம் புரியும்.

இதையும் படிக்கலாமே
ஜுவாலாமுகி திருக்கோவில் வரலாறு

English Overview:
Here we have Aarathi benefits in Tamil. Aarathi palan in Tamil. Harathi palangal in Tamil. Karpoora harathi benefits in Tamil.