எவ்வளவு கருமையான சருமமும் தங்கம் போல தகதகவென மாசு, மருவின்றி ஜொலிக்க கற்றாழையை இப்படித்தான் செய்ய வேண்டும் தெரியுமா?

katrazhai-honey-sugar
- Advertisement -

தங்கள் முகம் எப்பொழுதுமே மாசு, மருவின்றி தகதகவென தங்கம் போல மின்னுவதற்கு எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் எத்தனை பேருக்கு அப்படியான சருமம் உள்ளது? சிலருக்கு சருமம் மிருதுவாக இருந்தாலும், கருமையான தோற்றத்துடன் இருப்பார்கள். சிலருக்கு நல்ல நிறம் இருந்தாலும், முகத்தில் சொரசொரவென்று இருக்கும். கருமையை அகற்றி, முகத்தில் இருக்கும் சொரசொரப்பு தன்மையை நீக்கி முகத்தை மிருதுவாக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு! ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது? என்பதில் தான் சூட்சமம் உள்ளது. முகத்திற்கு கற்றாழையை எப்படிப் பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உங்கள் முகம் நல்ல நிறத்துடன் சொரசொரவென்று கரும்புள்ளிகள், பருக்கள் பாடாய்படுத்தி கொண்டிருக்கிறது என்றால், நீங்கள் கற்றாழையை இப்படித் தான் பயன்படுத்த வேண்டும். முதலில் கற்றாழையை முழுதாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியை வெட்டிவிட்டு நடுப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் சரிசமமாக இரண்டாக வெட்டி பிரித்துக் கொள்ளுங்கள். பாதி பகுதியில் கொஞ்சம் சதை பகுதியும், மீதி பகுதியில் கொஞ்சம் சதைப் பகுதியும் இருக்கும். இப்போது ஒரு பகுதியை மட்டும் எடுத்து 5 முதல் 7 முறை நன்கு தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை உதறிவிட்டு, அந்த மேல் பகுதியில் கொஞ்சம் நகத்தை வைத்து சுரண்டி கொள்ளுங்கள். ஒருவிதமான பிசுபிசுப்பு தன்மை அதிலிருந்து வரும். அதன் மேல் சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள்.

இப்போது உங்க முகம், நெற்றி போன்ற பகுதிகளில் சர்க்கரை கரைவதற்குள் நன்கு அழுத்தம் கொடுக்காமல் வேகமாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொழுது உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள், மாசுகள், கரும்புள்ளிகள், கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியில் வரும். ஒரு பத்து நிமிடம் இது போல, எல்லா இடங்களிலும் மசாஜ் செய்த பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்கள் முகமானது எந்த அளவிற்கு சேதப்பட்டுள்ளது? என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும் அளவிற்கு முகம் பளிச்சென இருக்கும். இப்போது மீதமிருக்கும் கற்றாழையை நன்கு அலசிவிட்டு இதே போல சுரண்டி கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் விட்டு முகம் முழுவது நன்கு தடவி கொள்ளுங்கள். இதனுடன் ஓரிரு சொட்டுக்கள் வேப்ப இலையை கசக்கி பிழிந்து அதன் சாற்றை சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்ல ஒரு பலன் கிடைக்கும். நன்கு எல்லா இடங்களிலும் மசாஜ் செய்த பின்பு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே உலர விட்டு விடுங்கள்.

நன்கு உலர்ந்த பின்பு முகத்தை தண்ணீரால் கழுவி சுத்தமான காட்டன் துணியால் முகத்தை ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை பார்க்கவே உங்களுக்கு அவ்வளவு விருப்பமாக இருக்கும். அந்த அளவிற்கு முகம் நல்ல நிறத்துடன் மாசு, மருவின்றி சூப்பராக ஜொலிக்கும். இதே போல தொடர்ந்து 4 வாரங்கள் செய்து வர முகம் கருமையான நிறத்தில் இருந்து, நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறும். அது மட்டுமல்லாமல் முகத்திற்கு ரத்த ஓட்டம் கிடைத்து, ஆரோக்கியமான சருமம் நீடிக்கும்.

- Advertisement -