முகத்திலிருக்கும் கருந்திட்டுக்களை இருந்த வடு தெரியாமல் நீக்குவதற்கு இந்த 2 பொருளை இப்படி செய்யுங்கள் முகம் வெள்ளை வெளேரென்று பளிச்சிடும்!

face-carrot-honey
- Advertisement -

எல்லோருடைய முகமும் சீரான நிறத்தைப் பெற்று இருப்பதில்லை. சிலருக்கு ஒரு இடத்தில் நல்ல நிறமும், ஒரு சில இடங்களில் கருந்திட்டுக்களும் திடீரென வரத் துவங்கும். இது போல கருந்திட்டுக்கள் வந்து விட்டால் அவற்றை நீக்குவது என்பது ரொம்பவும் கஷ்டமான காரியமாக இருக்கும். கருந்திட்டுக்களை எளிதாக நீக்குவதற்கு உரிய சத்துக்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எப்படி பயன்படுத்தி கொள்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதை முகத்தில் சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, நம் முகம் இழந்த பொலிவை வெகு விரைவாக மீட்டு எடுத்து விடும். அத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாக இருப்பது கேரட். வாரத்திற்கு இரண்டு நாள் ஆவது கேரட்டை சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -

கேரட்டை உணவாக உட்கொள்வது மட்டுமல்லாமல், கேரட்டை வெளிப்புற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். முடி வளர்ச்சி மற்றும் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கருந்திட்டுக்களை அகற்ற கூடிய சத்துக்கள் இது தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டுள்ளது. கேரட்டில் இருக்கும் பயோட்டின், பொட்டாசியம், வைட்டமின்கள், வைட்டமின் K1, B6 போன்றவை நம் முகத்தில் நல்ல ஒரு பொலிவை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.

ஒரு கேரட்டை நன்கு வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கேரட் சாற்றை சுத்தமான காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கேரட் சாற்றுடன் சுத்தமான மலை தேன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கலந்து கொள்ளுங்கள். தேன் கேரட்டுடன் சேர்க்கும் பொழுது கருந்திட்டுக்களை அழிக்கக் கூடிய தன்மையும் பிறக்கிறது.

- Advertisement -

அது சுத்தமான தேனாக இருக்க வேண்டும். கலப்படமில்லாத தேனாகப் பார்த்து கடையில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. இந்த தேனுடன் கேரட் சாற்றை சம அளவு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை கருந்திட்டுக்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் தடவி அரை மணி நேரம் நன்கு உலர விட்டு கொள்ளுங்கள். பிறகு நன்கு சூடாக இருக்கும் தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை மெதுவாக அழுத்தம் கொடுக்காமல் சுத்தமாக துடைத்து கொள்ள வேண்டும்.

இது போல தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து ஒரு மாதம் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள், மாசு, மருக்கள் போன்ற எவ்வகை சரும நோய்கள் ரொம்பவே எளிதாக நம் முகத்தை விட்டு நீங்கி நம்முடைய முகமா இது? என்று பார்த்து வியந்து போகும் அளவிற்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். குறிப்பாக இந்த கருந்திட்டுக்கள் பாடாய் படுத்திக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் தினமும் இது போல் தடவி வர நாளடைவில் திட்டுக்கள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து இருந்த வடு கூட தெரியாமல் உங்களுடைய பழைய சருமத்தை நீங்கள் மீட்டுவிடலாம், எனவே கேரட் சாறு மற்றும் தேன் கலந்து இது போல தினமும் பயன்படுத்துங்கள். நீங்களும் உங்கள் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை எளிதாக அகற்றி பயன்பெறுங்கள்.

- Advertisement -