142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் – வீடியோ

karuna
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கையில் அந்த அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பெரா மைதானத்தில் துவங்கியது.

karunaa

இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 534 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதற்கடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆட துவக்க வீரராக களமிறங்கினார் இலங்கை அணியை சேர்ந்த கருணரத்னே.

- Advertisement -

கருணரத்னே 46 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய 142 கி.மீ வேகத்தில் வந்த பந்து நேராக கருணரத்னேவின் கழுத்தின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. பந்து பட்ட அடுத்த நொடியே களத்தில் சுருண்டு விழுந்தார். அசையக்கூட முடியாமல் இருந்த அவரை மைதான காப்பாளர்கள் படுக்கையில் வைத்து அழைத்து சென்றனர்.

- Advertisement -

மைதானத்தில் இருந்த இலங்கை அணியை சேர்ந்த ரசிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கட் வாரியம் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவலை வெளியிட்டது. அதன்படி இன்னும் 2 நாட்களில் அவர் பூரண குணமடைவார் என்றும், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை என்று அறிவித்தது.

இதையும் படிக்கலாமே :

டி.ஆர்.எஸ் அப்பீல் செய்யாமல் நடுவரின் தவறான முடிவால் அவுட் ஆகி வெளியேறிய ராஸ் டெய்லர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -