டி.ஆர்.எஸ் அப்பீல் செய்யாமல் நடுவரின் தவறான முடிவால் அவுட் ஆகி வெளியேறிய ராஸ் டெய்லர் – வீடியோ

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

rohith

ரோஹித் 2 ரன்களிலும், தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு இறங்கிய கில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். பெரிதும் நம்பப்பட்ட தோனி மட்டுமே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பிறகு, ராயுடு, ஷங்கர் மற்றும் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 252 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

பிறகு, நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முன்ரோ 24 ரன்கள், நிகோல்ஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய டெய்லர் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ஹார்டிக் பாண்டியா பந்து வீச்சில் எல்,பி, ஆகி வெளியாரினார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

ஆனால், இந்த விக்கெட் உண்மையில் அவுட் இல்லை. பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றது பிறகு தெரியவந்தது. ஒருவேளை விக்கெட்டை எதிர்த்து அப்பீல் செய்து இருந்தால் அவர் அவுட்டிலிருந்து தப்பி இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட தமிழக வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -