இந்த எண்ணெயை 1 முறை தலைக்கு தேய்த்து குளித்தாலே போதும். எப்பேர்ப்பட்ட சாபத்திற்கும் 1 நாளில் விமோசனம் கிடைத்து விடும்.

sabam

நாம் பெறப்பட்ட சாபத்திற்கு, விமோசனம் கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வயிறு எரிந்து அடுத்தவர்கள் விட்ட சாபத்திற்கான தண்டனையை ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நாம் அனுபவித்தே தீரவேண்டும். சாபங்களில் நிறைய வகை உண்டு. சண்டையில் அடுத்தவர்கள் விட்ட சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், இப்படியாக மனிதர்களால் மட்டும்தான் நமக்கு சாபம் கிடைக்கும் என்பது கிடையாது. புழு, பூச்சிகள், விலங்குகள் இப்படி வாயில்லா ஜீவன்களிடம் இருந்தும் நமக்கு சாபம் கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய சாபங்கள், கண்ணுக்குத் தெரியாத போன ஜென்மத்தில் நம்முடைய முன்னோர்கள் வாங்கிய சாபங்கள் என்று நம்மை கர்மவினைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றது.

sabam

இப்படியாக கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்கு தெரியாத எப்பேர்பட்ட சாபங்களாக இருந்தாலும், அதில் இருந்து விமோசனம் பெறுவதற்கு நம்முடைய முன்னோர்கள் ஒரு சுலபமான பரிகாரத்தை சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். அது என்ன பரிகாரம்? அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கருஞ்சீரகத்தில் மருத்துவ குணம் அதிகமாகவே உள்ளது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். மருத்துவ குணத்தோடு இதற்கு ஆன்மீக ரீதியான மகத்துவமும் அதிகம். கருஞ்சீரகத்திலிருந்து பெறப்பட்ட சுத்தமான கருஞ்சீரக எண்ணெயை வைத்து தான் இந்த பரிகாரமே சொல்லப்பட்டுள்ளது. நாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரக எண்ணெயை கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெட்டிவேரையும் வாங்கிக் கொள்ள வேண்டும். கருஞ்சீரக எண்ணெயின் வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து விடுங்கள்.

karunjeeraga-ennai

இதற்கு அளவுகள் எல்லாம் கிடையாது. 100 கிராம் அளவு கருஞ்சீரக எண்ணெயை வாங்கினால், 10 கிராம் வெட்டிவேர், போட்டு ஊற வைத்துக் கொள்ளலாம். தயார் செய்த இந்த எண்ணெயை அப்படியே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். அஷ்டமி நவமி திதிகளில் இந்த கருஞ்சீரக எண்ணெயை ஒரு சொட்டு தொட்டு, உங்களுடைய உச்சந் தலையில் லேசாக வைக்க வேண்டும். இரண்டு காதின் மேல் பகுதிகளிலும் லேசாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது லேசாக தடவிக்கொண்டு தலை ஸ்னானம் செய்து விட்டால் போதும். இப்படி ஒரு முறை செய்தாலே உங்களை துரத்தும் சாபத்திற்கு விமோசனம் கிடைத்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதி அற்புதம் வாய்ந்த இந்த பரிகாரத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

vetti-ver0

சிலர் விட்ட சாபங்கள் உடனே பலிக்கும். சிலர் விட்டு சாபங்கள் இரண்டு மூன்று தலைமுறை தாண்டி வரக்கூடிய சந்ததியினரை கூட பாதிக்கும் என்று சொல்லுவார்கள். உங்களுடைய குடும்பத்திற்கும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து வந்தால், சாபத்தின் மூலம் தான் அந்த பிரச்சனை வர காரணம் என்று உங்களுக்கு தெரிந்தால், சுலபமான இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

ennai-kuliyal

நிச்சயமாக நல்ல பலன் தெரியும். மாதம்தோறும் வரும் அஷ்டமி நவமி திதிகளில் இந்த கருஞ்சீரக எண்ணெய் தலை குளியலை செய்து வாருங்கள். இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தால் நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.