கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு. அந்த வகையில் கருஞ்சீரகத்தால் தீரக்கூடிய சில நோய்களை பற்றியும், கருஞ்சீரகத்தை உண்ணும் முறை பற்றியும் இங்கு காண்போம்.
கருஞ்சீரகம் பயன்கள்
வயிற்று கோளாறுகள்
கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.
சிறுநீரக கற்கள்
கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது.
தோல் குறைபாடுகள்
கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.
சுவாச நோய்கள்
ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோய் தடுப்பு
கருஞ்சீரக பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.
தலை முடி உதிர்வதை தடுக்கலாம்
கருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து, வாரம் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் அரைமணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே:
உடல் சூடு குறைய டிப்ஸ்
இது போன்ற அமிழும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Karunjeeragam benefits in Tamil. It can also be called as Karunjeeragam uses in Tamil. Karunjeeragam powder benefits and Karunjeeragam uses for hair growth in Tamil also explained here.