புரதச்சத்து அதிகம் உள்ள கருப்பு கவுனி அரிசிக்கு மக்கள் ஏன் மாறி வருகின்றனர்? இதில் இருக்கக்கூடிய நன்மை தரும் விஷயங்கள் என்னென்ன?

karuppu-kavuni-rice_Tamil
- Advertisement -

சாதாரண வெள்ளை அரிசியை விட இந்த கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. இன்று பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து வருவதற்கும் அரிசி உணவை உட்கொள்வதற்கும் தொடர்பு உண்டு. வெள்ளை அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஃபேட், ஒபிசிட்டி போன்ற பிரச்சனைகளும் வருகிறது. ஒரு வேளை அரிசி உணவையும், இருவேளை மற்ற லேசான உணவையும் அதனால் தான் எடுத்துக் கொள்ள சொல்கின்றனர். அப்படி இருக்க இந்த வைல்ட் ரைஸ் எனப்படும் கருப்பு கவுனி அரிசிக்கு மக்கள் மாறுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பது போன்ற ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கருப்பு கவுனி அரிசி வட அமெரிக்காவை தன் பூர்வீகமாக கொண்டுள்ளது. இந்தியாவிலும் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் உள்ள இடங்களில் கருப்பு கவுனி அரிசி விளைவிக்கப்படுகிறது. இதன் நிறம் கருமையாக இருப்பதால் இந்த பெயர் இதற்கு வந்துள்ளது. அதிக அளவு நார்ச்சத்து, புரதம், ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள இந்த கருப்பு கவுனி அரிசி இயற்கையாக ஆக்ஸிஜனேற்ற சக்தியை கொண்டுள்ளது.

- Advertisement -

கருப்பு கவுனி அரிசியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் எடுத்துக் கொண்டால் இதுவும் ஆபத்தைத் தான் கொடுக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதில் ஈயம், ஆர்சனிக், காட்மியம் போன்ற உலோகங்களும் கலந்துள்ளதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் சர்க்கரை, கொழுப்பு, கலோரி ஆகிய மூன்றும் குறைந்த அளவில் காணப்படுகிறது என்பதால் உடல் எடை கூடாது. மேலும் இதில் இருக்கும் ஃபீனாலிக் ஆக்சிஜனேற்றம் வளர்ச்சிதை மாற்றத்தை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

- Advertisement -

கருப்பு கவுனி அரிசி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றன. மேலும் கொலஸ்ட்ராலை குறைத்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி பிரச்சனைகளை குறைக்கிறது. நம் உடலை கட்டுக்கோப்பாகவும், தசைகள் வலுவாகவும் இருக்க கருப்பு கவுனி அரிசி தினமும் எடுத்துக் கொள்ளலாம். LDL என்கின்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு. இதில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி வீக்கத்தை குறைக்கும்.

இதையும் படிக்கலாமே:
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த இந்த 8 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

அரை கப் கருப்பு கவுனி அரிசியில் 3 கிராம் அளவிற்கு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குடல் பிரச்சினைகளை சரி செய்து, செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் நச்சுத் தன்மைகளை நீக்கி, கழிவுகளை அகற்றி கல்லீரலுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. கருப்பு கவுனி அரிசி முழு தானியங்களில் ஒன்றாக இருப்பதால், வெள்ளை அரிசிக்கு பதிலாக தினசரி உணவில் ஒரு வேளையாவது இதை பயன்படுத்தலாம். மேலும் இதில் உயிர்ச்சத்து, விட்டமின் பி மற்றும் ஈ ஆகியவை அதிகம் உள்ளதால் தசை பிடிப்பு, நரம்பு தளர்ச்சி, தோல் நோய்களிலிருந்து மீட்டெடுக்கிறது. கருப்பு கவுனி அரிசியில் பொங்கல், பாயாசம், சாதம், கஞ்சி, இட்லி, தோசை கூட செய்து சாப்பிடுவது உண்டு.

- Advertisement -