- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த 2 ஏலகாய்கள் இருந்தால் போதும். சொல்ல முடியாத செல்வத்தை சுக்கிர பகவான் கொட்டிக் கொடுப்பார்.

இந்த 2 ஏலகாய்கள் இருந்தால் போதும். சொல்ல முடியாத செல்வத்தை சுக்கிர பகவான் கொட்டிக் கொடுப்பார்.

- Advertisement -

ஜாதகத்தில் சுக்கிர யோகம் உள்ளவர்கள் நிச்சயமாக பணக்காரர்களாக தான் இருப்பார்கள். சுக்கிர யோகம் இல்லாதவர்கள் பணக்கஷ்டத்தில் இருப்பார்கள். சுக்கிரன் யோகம் கொண்டவர்கள் யோகக்காரர்கள். சுக்கிர யோக இல்லாதவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். காரணம் சுக்கிரன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக கஷ்டம் இருக்கும்‌. ஜாதகத்தில் பலம் இல்லாத சுக்கிரனை எப்படி பலப்படுத்துவது. ஒரு சுலபமான  தாந்திரீக ரீதியான பரிகாரம் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரம் வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மட்டும் அல்ல. உங்களுக்கு பொலிவையும் அழகையும் தன்னம்பிக்கையும் கொடுக்கக்கூடிய பரிகாரமாகவும் இருக்கும்.

ஜாதகத்தில் சுக்கிர யோகம் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. யார் செய்தாலும் பரிகாரத்தின் மூலம் பலம் உண்டு. இந்த பரிகாரத்திற்க்கு நமக்குத் தேவை 2 பெரிய ஏலக்காய். கருப்பு நிறத்தில் இருக்கும் இரண்டு பெரிய ஏலக்காய். எல்லா மளிகை கடைகளிலும் பெரும்பாலும் இந்த ஏலக்காய் கிடைக்கும். அதை வாங்கி நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அடுப்பில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி நன்றாக சுட வையுங்கள். அந்த தண்ணீரில் இந்த இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

ஏலக்காயின் சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்க வேண்டும். அரை லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் தண்ணீர் உங்க விருப்பம் போல தண்ணீரை வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் நன்றாக கொதித்து வந்து அந்த ஏலக்காயின் வாசம் தண்ணீரில் வீசவேண்டும். அடுப்பை அணைத்து விடுங்கள். ஏலக்காய்களை தண்ணீரில் இருந்து எடுத்து விட்டாலும் பரவாயில்லை. ஏலக்காய் சாறு இறங்கிய அந்த தண்ணீரை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரோடு சேர்த்து குளித்து வர வேண்டும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏலக்காய் தண்ணீரில் குளிப்பது சுக்கிரன் யோகம் தரும்.

தினம்தோறும் இப்படி குளித்தாலும் தவறு கிடையாது. ஆனால் குறிப்பாக வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் ஏலக்காய் தண்ணீரில் குளித்து வந்தால் நீங்கள் யோகக்காரர்கள் ஆக மாறிவிடலாம். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும். பணம் பல வழிகளில் உங்களை தேடி வரும். கடன் சுமை குறையும். நீங்கள் செல்வந்தர்களாக மாறலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக சிறிய அளவில் இருக்கும் பச்சை ஏலக்காய்களை எப்போதுமே நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் போட்டு வையுங்கள். உங்களுடைய பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஏலக்காய் காய்ந்ததும், பச்சை நிறம் வாசனை போனபின்பு பழைய ஏலக்காய்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய ஏலக்காய்களை மாற்றினாலே போதும்.

அழகும் அந்தஸ்தும் உயர உயர இந்த உலகத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மரியாதை உயர்ந்து கொண்டே தான் செல்லும். பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் பணத்தின் மீது பற்று கொண்டவர்கள், இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக கைமேல் பலன் உண்டு என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்