உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம் காணாமல் போய், காசு பணம் கொட்ட தொடங்கிவிடும்.

mirror

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில் விரிசல் இருந்தால், எதிர்மறை ஆற்றலை தன்னுள் கிரகித்து கொண்டு, எதிர்மறை ஆற்றலை வீட்டில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கண்ணாடியை வைத்து சுலபமாக செய்யக்கூடிய, நம் வீட்டில் பண வரவை அதிகரிக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mirror-poojai

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது கண்ணாடி. இதே போல் தான் சோழிகள். கடலில் இருந்து எடுக்கப்படும் எல்லா வகையான பொருட்களும் அந்த மகாலட்சுமியின் அம்சம். அந்த வரிசையில் இந்த சோழியும் அடங்கும். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த சோழியை கட்டாயம் வீட்டில் வைத்திருப்பார்கள். விளையாட்டிற்கு பயன்படுத்துவதற்காகவாவது ஒரு வீட்டில் சோழிகள் நிச்சயம் இருக்கும். காலப்போக்கில் அந்த விளையாட்டுகளும் மறைந்து விட்டது. சோழிகளும் பெரும்பாலும் இப்போது நம்முடைய வீடுகளில் இருப்பதில்லை.

இருப்பினும் ஒரு வீட்டில் பூஜை அறையில் சோழியை, பூஜை பொருளாக வைப்பது என்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். இதைப்போல் தான் பூஜை அறையில் அந்த காலங்களில் கண்ணாடியை வைத்து வழிபடுவதை பழக்கமாக வைத்திருந்தார்கள். அந்தப் பழக்கமும் இப்போது காலப்போக்கில் மறைந்து விட்டது.

chozhi

நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி, அந்த சிறிய கண்ணாடிக்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல்விளக்கில் 5 சோழிகள் போட்டு வைத்துவிட வேண்டும். 5 கருப்பு நிற சோழிகள் போட்டு வைப்பது மேலும் நல்லது. அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதாவது முகம் பார்க்கும் கண்ணாடியில், அகல் விளக்கில் இருக்கும் தோழியின் பிம்பம் பிரதிபலிக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய சோழியின் பிம்பம் கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது, நமக்கு வீட்டில் இரட்டிப்பு பலன் கொடுக்கும்.

- Advertisement -

இந்த தோழியை 48 நாட்கள் இதே முறைப்படி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமியின் ஸ்வரூபமாக வழிபட்டு வரவேண்டும். இதோடு சேர்த்து ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 48 நாட்கள் கழித்து அந்த சோழியை நீங்கள் அந்த இடத்தில் இருந்து எடுத்து விடலாம். அந்த சோழிக்காக இப்போது 48 நாட்கள் பூஜை செய்து நீங்கள் சக்தியை உருவேற்றி வைத்திருக்கிறீர்கள்.

mirror

இந்த சோழியில் இருந்து ஒன்றை எடுத்து, உங்கள் மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த சோழியை கொடுத்து பணம் வைக்கும் பர்சிலோ, பெட்டியில் வைத்துக் கொள்ளச் செய்யலாம். பணம் காசு தங்குதடையின்றி வரத்தொடங்கும். வீண் விரயங்கள் குறையும். விரும்பிய நேரத்தில் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு கைக்கு பணம் இல்லை என்ற கஷ்டம் உங்களுக்கு வராது.

mahalashmi3

ஆண்கள் முடிந்தவரை பணம் வைக்கும் பர்சை பேண்ட் பாக்கெட்டில் பின்பக்கம் வைப்பதை தவிர்ப்பது நல்லது. பின்பக்கம் வைத்தால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். பரிகாரத்திற்க்காத பயன்படுத்தப்படும் கண்ணாடி, சோழி, அகல்விளக்கு எல்லாம் புதியதாக வாங்கிக் கொள்வது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இது தெரிந்தால் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.