1 நிமிடத்தில் கறுத்துப்போன வெள்ளி பொருட்களை கடையில் கொடுத்து பாலீஷ் போட்டது போல பளபளப்பாக மாற்ற இந்த 1 பொருள் போதும்.

silver
- Advertisement -

கொட்டாங்குச்சியை வைத்து கறுத்துப்போன வெள்ளி பொருட்களை பாலீஷ் போட்டது போல எப்படி மாற்ற முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். நிச்சயமாக சூப்பர் ஐடியா இது. உங்கள் வீட்டில் கறுத்துப்போன வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி குத்து விளக்கு, கொலுசு, செயின், தண்டை, எது இருந்தாலும் இந்த மெத்தடை யூஸ் பண்ணி சுத்தம் செய்து பாருங்க. கை வலிக்காது. ஆனா வெள்ளிப் பொருட்கள் கடையில் காசு கொடுத்து பாலிஷ் போட்டது போலவே பள பளனு மாறியிருக்கும். 100% கேரண்டீ வாங்க உள்ளே போகலாம்.

தேங்காய் துருவிய பின்பு அந்த கொட்டாங்குச்சி எல்லார் வீட்டிலும் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அந்த நெருப்பில் இந்த கொட்டாங்குச்சியை வைத்து நன்றாக எரிய விடுங்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாக இந்த வேலையை செய்யுங்கள். கையில் இடுக்கியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் வெளிப்பக்கம் இடம் இருந்தால் ரொம்பவும் சவுகரியம். கொட்டாங்குச்சியில் ஒரு சிறிய கற்பூர துண்டை வைத்து எரிய விட்டு நெருப்பு மூட்டி தூபம் போடுவதற்கு தயார் செய்வோம் அல்லவா அதேபோல கொட்டாங்குச்சியை முழுமையாக எரித்து விடுங்கள். (கொட்டாங்குச்சியில் நெருப்பு பற்றி திகுதிகுவென எரிய ஆரம்பிக்கும்.) நெருப்பில் எரிந்து கருகி, கொட்டாங்குச்சியில் நெருப்பு அனைய வேண்டும்.

இப்போது நமக்கு கருப்பான கொட்டாங்குச்சி கிடைத்திருக்கும் அல்லவா. அது கொஞ்சநேரம் சூடு ஆறிய பின்பு ஒரு ஸ்பூனை வைத்து நசுக்கினால் இது சிறு சிறு துண்டுகளாக உடையும். உடைந்த இந்த கொட்டாங்குச்சியில் மேல் 1 எலுமிச்சம் பழச்சாறை நன்றாகப் பிழிந்து, இதை அப்படியே எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளுங்கள். 80% அரைபட்டால் போதும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கட்டும். இந்த பொடியை அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பொடித்து வைத்திருக்கும் கருப்பான கொட்டாங்குச்சி பொடி தேவையான அளவு அதாவது 1 ஸ்பூன் எடுத்து ஒரு தட்டில் போட்டு, அதில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் ஜெல் ஊற்றி கரைத்தால் ஒரு பேஸ்ட் போல கலவை தயாராக கிடைத்திருக்கும். எண்ணெய்ப் பிசுக்கு உள்ள விளக்கை தேய்க்க வேண்டும் என்றால் கட்டாயமாக பாத்திரம் தேய்க்கும் ஜெல் அவசியம். இப்போது நமக்கு வெள்ளி பாத்திரத்தை தேய்த்த தேவையான கொட்டாங்குச்சி பேஸ்ட் தயார்.

பல் தேய்க்கும் பிரஷில் இந்த பேஸ்டை தொட்டு கருப்பாக இருக்க கூடிய வெள்ளி விளக்கை நன்றாக தேய்த்து கொடுங்கள். இண்டு இடுக்குகள் மூலை முடுக்குகளில் படும்படி பிரஷால் தேய்க்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் தேய்த்து விளக்கை அப்படியே 1 நிமிடம் கீழை வைத்து விடுங்கள். இந்த கொட்டாங்குச்சி துகள்களில் விளக்கு அப்படியே ஒரு நிமிடம்  ஊறட்டும். 1 நிமிடம் கழித்து நல்ல தண்ணீரில் இந்த விளக்கை கழுவி விடுங்கள். அந்த விளக்கு எப்படி இருந்தது ரிசல்ட்டை நீங்களே சொல்லுங்க.

இதேபோல்தான் கருப்பாக இருக்கும் கொலுசு, செயின், மற்ற எல்லா பொருட்களையும் தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். நீங்க ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ரிசல்ட்டை நீங்கதான் சொல்லணும்.

- Advertisement -