கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே விரைவில் போக்க உதவும் சுலபமான முறை இதோ.

karuvalayam
- Advertisement -

எந்த ஒரு மனிதருக்கும் அவர்களின் முக அழகை கூட்டிக் காட்டுவதில் கண்கள் மிக முக்கிய ஒரு அங்கமாக விளங்குகிறது. சிலர் கண்களை அதிகம் வருத்தி செயல்படுவதால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகின்றது. இத்தகைய கருவளையங்கள் பெண்களுக்கு முக அழகை குறைப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக குறைத்து விடுகிறது. கருவளையங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? அப்படி ஏற்பட்டிருக்கும் கருவளையங்களை வீட்டில் இருக்கின்ற பொருள் கொண்டே போக்குவது எப்படி? என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கருவளையம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது குறைந்த அளவு தூக்கம். தற்காலத்தில் ஆண் – பெண் பேதமில்லாமல் அனைவரும் இரவு 12 மணி வரை தங்களின் கணினிகள், கைப்பேசிகளை பார்த்தவாறு செயல்பட்டு, பிறகு உறங்கச் செல்கின்றனர். இப்படி செய்வதால் கண்களுக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு கீழாக இருக்கும் தசைகளை சோர்வடையச் செய்து கருவளையங்கள் ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

கண்களையும், கண்களை சுற்றியுள்ள பகுதிகளையும் அளவுக்கதிகமாக கைகளால் தேய்ப்பது, அதிக அளவு காபி அருந்துவது, அனீமியா எனப்படும் ரத்த சோகை, மன அழுத்தம், நீண்ட நேரம் நேரடியான சூரிய ஒளியில் இருப்பது, தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவை கண்களுக்கு கீழான பகுதிகளில் கருவளையங்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்களாகும்.

கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையங்களை போக்க பணத்தை செலவு செய்ய வேண்டியதில்லை. நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களைக் கொண்டே கருவளைய பிரச்சனையை போக்கிவிடலாம்.

- Advertisement -

டிப்ஸ் 1: கண்களுக்கு கீழாக இருக்கும் கருவளையங்களின் மீது ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 நிமிடங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அந்தப் பகுதியில் இருக்கின்ற தசைப்பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் குறைந்து சிறிது சிறிதாக கருவளையம் நீங்கும். ஐஸ் ஒத்தடம் கொடுக்க முடியாத பட்சத்தில் ரெடிமேட் கிரீன் டீபேக்களில் இரண்டை நீரில் நனைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டி இரண்டு கண்களின் மீதும் அந்த டீபேக்குகளை 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். கருவளையங்கள் நீங்கும் வரை இப்படி தொடர்ந்து செய்யலாம்.

டிப்ஸ் 2: புதினா இலைகளில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் அந்த இலைகளை சிறிதளவு எடுத்து, நன்கு அரைத்து, கருவளையங்களின் மேலே பூசி 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதால் கண்களை சுற்றியுள்ள தோல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராகி கருவளையங்கள் நீங்கும்.

- Advertisement -

டிப்ஸ் 3: ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் பன்னீர், 1 ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து, சிறிதளவு பஞ்சு எடுத்து இந்த கலவையில் ஊற வைத்து, பிறகு அந்த பஞ்சுகளை கருவளையம் இருக்கும் பகுதிகள் மீது 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் கண்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ் 4: 1 பெரிய தக்காளியை சாறு பிழிந்து, அந்த தக்காளி சாற்றில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து, உங்கள் கண்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் உங்கள் கண்களை சுற்றி இருக்கும் பகுதிகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பொதுவாக அதிக நேரம் கணினி அல்லது மொபைல் போன்களை பார்ப்பவர்கள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவுவது, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தங்களது பார்வையைகாணியில் இருந்து விளக்கி வேறு பொருட்களை பார்ப்பது, கண்களை முடிந்த அளவு அதிகமாக சிமிட்டுவதும் போன்றவை கண்களுக்கு நல்லது.

- Advertisement -