- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalருசியான கருவேப்பிலை பொடி ரகசியம்

ருசியான கருவேப்பிலை பொடி ரகசியம்

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் கிராமத்து பாட்டிகள் ஆரோக்கியமான உணவு வகைகளை எளிதாக வீட்டிலேயே தரமானதாக தயாரித்து வைப்பார்கள். அதில் மிக முக்கியமான ஒரு பொருள் கருவேப்பிலை பொடி, பருப்பு பொடி போன்ற பொடி வகைகள் ஆகும். அந்த வகையில் இந்த கருவேப்பிலை பொடி அட்டகாசமான ருசியுடன் மண்மனம் மாறாமல் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவி‌ன் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

கருவேப்பிலை பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலைப்பருப்பு – ஒரு டம்ளர்
  • உளுத்தம் பருப்பு – ஒரு டம்ளர்
  • வேர்க்கடலை – ஒரு டம்ளர்
  • வரமிளகாய் – 10
  • கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவிற்கு
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை பொடி செய்முறை விளக்கம்:

    முதலில் அடிகனமான ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து அதன் மீது வைத்து லேசாக சூடேற்றியவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு கடலைப்பருப்பு சேர்த்து பொறுமையாக பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே டம்ளர் அளவிற்கு உளுத்தம்பருப்பு சேர்த்து இதே முறையில் பொறுமையாக பொன் நிறமாக வாசம் வர வறுத்துக் கொள்ளுங்கள்.

    - Advertisement -

    நன்கு வறுபட்டதும் அதையும் எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுத்ததாக ஒரு டம்ளர் அளவிற்கு வேர்க்கடலைகளை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். வேர்க்கடலைகளை தோலுடன் சேர்க்கலாம், நீங்கள் வறுத்து எடுத்ததும் தோலை நீக்கிக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்ததும் கொஞ்சம் சூடு பொறுக்க ஆறவிடுங்கள் அதன் பிறகு தோலை நீக்கிவிட்டு தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பத்து வரமிளகாய்களை நன்கு சிவந்ததாக பார்த்து எடுத்து சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பின் சூட்டிலேயே மிளகாயை வறுக்க வேண்டும்.

    மிளகாய் மொறு மொறு என்று ஆனதும் அப்படியே நிழலில் காய வைத்து எடுத்த கறிவேப்பிலைகளை ரெண்டு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை உருவி நிழலில் முன்பே காய வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் நீங்கி நன்கு காய்ந்ததும் பொடி தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். சூட்டிலேயே மிளகாய் உடன் சேர்ந்து கறிவேப்பிலையும் மொறு மொறுவென்று ஆகிவிடும். அவ்வளவுதான் இப்பொழுது தட்டில் வைத்து ஆற வைத்த அத்தனை பொருட்களையும், ஒரு மிக்ஸர் ஜாரில் ஈரம் இல்லாமல் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்வது அவசியம்.

    - Advertisement -

    இதையும் படிக்கலாமே:
    சொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்

    அரைத்து எடுத்த இந்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி பொடிக்கு பதிலாக இந்த கருவேப்பிலை பொடியை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் ருசி அட்டகாசமாக இருக்கும். குழம்பு, கூட்டு, பொரியல் என்று செய்ய முடியாத சமயத்தில் இது போல பொடி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும், ருசியான சாப்பாட்டை ருசித்த திருப்தியும் கிடைக்கும். ட்ரை பண்ணி பார்த்து நீங்களும் அசத்துங்க.

    சற்று முன்