இன்றைய காலகட்டத்தில் 20 வயதுடைய இளைஞர்களுக்கே நரைமுடி பிரச்சனை என்பது வர துவங்கி விடுகிறது. நரை முடியை அப்படியே விட்டால் அது வயதான தோற்றத்தை தரும் என்பதற்காக, இயற்க்கைக்கு முரணான கெமிக்கல் ஹேர் டைகளை வாங்கி அதை தலையில் பூசிக்கொள்கின்றனர். அப்படி செய்வதன் மூலம் நரைமுடி பிரச்னையோடு சேர்ந்து முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பரான ஒரு இயற்க்கை ஹேர் டை எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
இந்த ஹேர் டைக்கு தேவையான பொருட்களை நாம் எங்கும் தேடி அலையவேண்டியது இல்லை. நம் வீட்டருகே கிடைக்கும் கருவேப்பிலை, கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டே இதை செய்து விடலாம்.
கருவேப்பிலை ஹேர் டை செய்முறை:
முதலில் இரண்டு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து அதை சுத்தமாக தண்ணீரில் அலச வேண்டும். கருவேப்பிலையில் உள்ள தூசிகள் நீங்கிய பிறகு அதை வெயிலில் உலர்த்த வேண்டும். கருவேப்பிலையில் தண்ணீர் இல்லாத அளவிற்கு உலர்ந்த பிறகு அதை ஒரு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.
கருவேப்பிலையின் நிறம் கருநிறமாக மாறும் வரை இப்படி செய்ய வேண்டும். அதன் பிறகு கருவேப்பிலையை ஆறவைத்து, அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பொடியை சல்லடையில் போட்டு நன்றாக ஜலித்துக்கொள்ள வேண்டும். இப்போது நமக்கு சுத்தமான கருவேப்பிலை பொடி தயாராகிவிட்டது. இப்போது உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு ஹேர் டை தேவை படுமோ அதற்க்கு ஏற்றார் போல ஒரு கப்பில் இந்த கருவேப்பிலை பொடியை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியோடு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அவ்வளவு தான் இயற்கையான ஹேர் டை தயார். இப்போது இதை உங்கள் தலையில் தடவிக்கொள்ளலாம்.
இந்த ஹேர் டையை அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை தொடர்ந்து இப்படி செய்துவர நரைமுடி கருமையாக மாறுவதோடு முடி உதிர்வு பிரச்சனையும் இருக்காது. அதே சமயம் உங்கள் தலை முடியும் வலிமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: 👉 வெறும் 3 நாட்களில் அடுத்தவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முகம் அழகாக மாற வேண்டுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.