ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். தங்களுடைய முயற்சிக்கு அப்பாற்பட்டு தெய்வத்தால் சரி செய்யக்கூடிய கஷ்டங்களும் இருக்கும். அந்த கஷ்டங்களை நீக்குவதற்கு தான் தெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்கிறோம். அப்படிப்பட்ட கஷ்டங்களை நீக்குவதற்கு காலபைரவரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளை மிளகு பரிகாரம்
பாவ கிரகங்கள் என்று கூறப்படக்கூடிய கிரகங்கள் ராகு மற்றும் கேது. இவை இரண்டும் எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறதோ அதை கேட்பார் போல் நமக்கு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ராகு கேதுவால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை நீக்குவதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் கால பைரவர். காலபைரவரை எந்த முறையில் வழிபாடு செய்தால் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்று தெரிந்து கொள்வோம்.
கேதுவிற்குரிய கிழமையாக திகழ்வது ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்வது என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய ஒன்றாக திகழ்கிறது. அனைத்து கிரகங்களாலும் ஏற்படக்கூடிய கஷ்டங்களை நீக்க கூடியவராக தான் காலபைரவர் திகழ்கிறார். காலங்களுக்கு தெய்வமாக திகழக்கூடிய இந்த காலபைரவரை ராகு கேதுவின் பாதிப்புகள் நீங்குவதற்கு வழி வழிபாடு செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நல்ல பலன்கள் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் காலபைரவரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த அகல் விளக்கில் இரண்டு வெள்ளை மிளகை போட வேண்டும். இந்த முறையில் நாம் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் தீபமேற்றி கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்.
இதே தீப வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ராகு காலத்தில் காலபைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. தீராத நோயால் பாதிக்கப்படுபவர்களும், நீண்ட நாட்கள் வழக்கு நீண்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பெண்களால் தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய முடியாது என்பதால் அவர்கள் செவ்வாய், ஞாயிறு இந்த இரண்டு கிழமைகளிலும் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ராகு காலத்தில் தீபமேற்றி வழிபாடு செய்ய காலபைரவரின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இந்த வழிபாட்டை ஒரே ஆலயத்தில் தான் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:மங்களங்களைத் தரும் மங்களகாரகன் வழிபாடு
இந்த மிளகு தீப வழிபாட்டை காலபைரவரின் ஆலயத்தில் செய்து வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம், கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.