வறுமையும் கஷ்டமும் உங்கள் நிலை வாசலுக்குள் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும். இந்த 2 தீபங்களை உங்கள் நிலை வாசல் படியில் இப்படி ஏற்றி வைத்தால்.

deepam1
- Advertisement -

எந்த ஒரு கெடுதலும் நம் நிலை வாசல்படிக்குள் நுழைவதற்கு பயந்து நடுங்க வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய வீட்டை நாம் பராமரித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். நிலை வாசலில் குடிகொண்டிருக்கும் அஷ்ட தேவதைகளும் மகாலட்சுமியும் குலதெய்வமும் நம்மைப் பாதுகாக்க அந்த இடத்திலேயே நிலைத்து நிற்க நிலைவாசல் பூஜை அவசியம் தேவை. நிலைவாசல் படி பராமரிக்கப்படாமல் கவனிக்க ஆளில்லாமல் இருக்கும் பட்சத்தில், அந்த நிலை வாசலில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் நிச்சயமாக அந்த இடத்தில் தங்கியிருக்காது. கஷ்டங்கள் நிலை வாசலுக்குள் சுலபமாக நுழைந்துவிடும்.

நம்முடைய வீட்டில் ஒரு கஷ்டம் ஏற்பட்டுள்ளது. நம்முடைய மனநிலை சரியில்லை என்றால், அதை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முதலில் செல்லக் கூடிய இடம் கோவில்கள். கலியுகத்தில் கஷ்டங்கள் தலைவிரித்தாடும் என்று அந்த காலத்திலேயே நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவேதான், மனிதர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு ஆங்காங்கே கோவில்களையும் கட்டி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

பலபேர், தங்களுடைய கஷ்டங்களை தீர்த்துக் கொள்வதற்கு செல்லும் இடமான புனிதத்துவம் வாய்ந்த அந்த கோவிலுக்கு எந்த பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய கஷ்டம் நீங்கும் என்பதைப் பற்றியும், நம் குடும்பத்தை, நம் வீட்டை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற எந்த தீபத்தை நம் வீட்டு நிலை வாசலில் ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

night-sleep-temple

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு துடைப்பம், பச்சை கற்பூரம், நல்லெண்ணெய், நெய், மஞ்சள் குங்குமம், பச்சரிசி, துவரம்பருப்பு இப்படி உங்களால் எந்த பொருட்கள் வாங்கித் தர முடியுமோ, அந்த பொருட்களை வாங்கி தானமாக கொடுங்கள்.

- Advertisement -

இந்தப் பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி தானம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு மாதம் ஒரு பொருள் என்று வாங்கிக் கொடுத்தாலும், உங்களுடைய வீட்டில் பல கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உங்களால் நிச்சயமாக உணர முடியும். இது ஒரு சுலபமான முறை தான். ஆனால் நமக்கு கிடைக்கும் பலன் என்பது அதி அற்புதம் வாய்ந்ததாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

அடுத்தபடியாக நம் நிலை வாசல் படியை பாதுகாக்கக்கூடிய தீபங்கள்! கோவில்களை பாதுகாக்கும் அந்த துவார பாலகர்களே, உங்கள் வீட்டை பாதுகாப்பது போல ஒரு பாதுகாப்பு வட்டம் என்று கூட இந்த தீபங்களை சொல்லலாம். எக்காரணத்தைக் கொண்டும் நிலை வாசலில் தரைப்பகுதியில் தீபத்தை வைத்து ஏற்ற வேண்டாம். மேல் பக்கத்தில் ஒரு மாடம் அமைத்து தீபம் ஏற்றும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும், இரண்டு மண் அகல் தீபங்களை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு, அந்த எண்ணெயில் கொஞ்சமாக வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லத்தில் ஒரு சிறிய துண்டை துகள்களாக நசுக்கி, அந்த வெல்லத்தை, இரண்டு தீபங்களில் நல்லெண்ணெயோடு சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும்.

vellam

இப்படி வெல்லத்தை போடும்போது துவார பாலகர்களை மனதார நினைத்து கொண்டு போட வேண்டும். இதோடு சேர்த்து அந்த விளக்குக்கு பக்கத்தில் அட்சதையை கொஞ்சமாக தூவி விடுங்கள். அந்த துவாரபாலகர்கள் கோவிலை பாதுகாப்பது போல உங்கள் நில வாசப்படியில் வந்து தங்கி உங்கள் வீட்டையும் பாதுகாப்பார்கள்.

atchathai

இந்த தீபத்தை ஏற்றிவைத்து நிலை வாசப்படியில் தினம்தோறும் துவாரபாலகர்களையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்தால், உங்களுடைய வீட்டிற்குள் எந்த ஒரு கஷ்டமும் உள்ளே நுழையாது. அதே சமயம் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நித்தமும் நிலைத்து நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -