இந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய கஷ்டங்களை, ஒருமுறை எழுதினாலே போதும். கசப்பான கருப்பான எல்லா கஷ்டங்களும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும்.

sad-lakshmi
- Advertisement -

சில பேர் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் நன்றாக படிக்காமல் போனதற்கு ஒரு காரணம். நல்ல வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். சொந்தத் தொழில் தொடங்கி அதில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு ஒரு காரணம். சோம்பேறித்தனமாக இருப்பது கூட ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் சூழ்நிலையை காரணம் காட்டிக்கொண்டு அடுத்தவர்களை கைநீட்டி குறை சொல்பவர்களுக்கு, நிச்சயமாக இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா நல்லதும் ஒருசேர கிடைத்தாலும், அவனால் முன்னேற்றமடைய முடியாது. வேறு ஒரு காரணத்தை காண்பித்து இதனால் தான் என்னால் வாழ்வில் முன்னேற முடியவில்லை என்று ஒரு சாக்கை சொல்லத்தான் செய்வான்.

உன்னால் முன்னேற முடியும் என்று ஆழ்மனதில் விதைத்து நினைத்துப்பார். நிச்சயமாக முன்னேற முடியும். உன்னுடைய இயலாமையை மறைத்து வைக்க ஒளித்து வைத்த, ஒரு போதும் நீ அடுத்தவர் மீது குறை போடாதே. இதை முதலில் உன் வாழ்க்கை பாடமாக வைத்துக்கொள். பிறகு உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிறைய கஷ்டங்கள் இருக்கும். அது எந்தக் கஷ்டமாக இருந்தாலும் சரி, உங்களுடைய மனதிற்கு பாரத்தைக் கொடுக்கும் அந்த பிரச்சனை. அந்த பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வை பெற இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு கடன் பிரச்சனை தீர வேண்டும். வேலையிலிருந்து உடனடியாக வெளியே வரவேண்டும். எனக்கு சுத்தமாக பிடிக்காத இந்த எதிரி என் பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது. உங்களுக்கு பிடிக்காத கெட்ட பழக்கங்கள், உங்களை விட்டு போக வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படியாக உங்களுக்குப் பிடிக்காத எந்த விஷயமாக இருந்தாலும், அதை காகிதத்தில் இப்படி எழுதவேண்டும். சிறிய கிண்ணத்தில் வேப்பெண்ணையை சிறிதளவு ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயில் வலதுகை ஆள்காட்டி விரலைத் தொட்டு, காகிதத்தில் உங்களுடைய பிரச்சனையை ஒரு வரியில் எழுதி விடுங்கள். உங்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விஷயத்தை எழுத போறீங்க. அதை அப்படியே சுருட்டி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் முன்பாக ஒரு தட்டில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி, அந்த கற்பூரம் எரிகின்ற நெருப்பில் உங்கள் கையில் வைத்திருக்கும் காகிதத்தை அப்படியே பொசுக்கி விடுங்கள். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்து முடித்ததும் உங்களுக்கு பிடிக்காத விஷயம் உங்களை விட்டு சென்றது போல ஒரு உணர்வு தோன்றி விடும். அந்த விஷயத்தை தலை மூழ்கி விட்டதாக நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடிக்காத அந்த கஷ்டம் அந்த ஒரு விஷயம் திரும்பவும் உங்களை தொந்தரவு செய்யாது. கருப்பான கசப்பான அந்த சம்பவம் உங்கள் நினைவை விட்டும் போய்விடும். உங்களை விட்டும் நீங்கிவிடும். உடனடியாக மன அமைதியை பெறலாம். இது ஒரு சிறிய தாந்திரிக முறை தான். எப்போதும் கோபத்தோடு டென்ஷனோடு மன அழுத்தத்தோடு ஏதாவது ஒரு பிரச்சினையில் உங்களைப் போட்டு குழப்பிக் கொள்ளும் நபராக நீங்கள் இருந்தால் இந்த பரிகாரத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -