உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக, நாளை இந்தப் பொருட்களை நெருப்போடு நெருப்பாக எரித்து விடுங்கள்.

neruppu1
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் இருக்கும் கஷ்டம் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக வேண்டுமென்றால், அந்த வீட்டில் தினம்தோறும் தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்றி வைக்கக் கூடிய தீபச்சுடரில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் எரிந்து போகும். நம்முடைய வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் காட்டக்கூடிய தீப ஒளியை பிரகாசமாக ஏற்றி வைக்கக் கூடிய கடமை பெண்களிடத்தில் தான் உள்ளது. வீட்டில் காலை தீபமேற்ற முடியாதவர்கள் கூட மாலையில் கட்டாயம் தீபம் ஏற்றி ஒரு நிமிடமாவது இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும்.

kamakshi vilakku

நம்முடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கிப் போக வேண்டும் என்றால், தீப வழிபாட்டுடன் சேர்ந்து நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் வெள்ளிக்கிழமை அன்று வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெள்ளிக்கிழமை காலை நீங்கள் இந்த தூபத்தை ஏற்றுவதற்கு, வியாழக்கிழமை மாலை நேரமே இந்த பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய அளவில் இருக்கும் மஞ்சள் நிற காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காட்டன் துணியின் ஒரு துண்டு சாதாரண கற்பூரம் (சூடம்), ஒரு துண்டு பச்சை கற்பூரம், மிளகு 5, கல்லுப்பு 1 ஸ்பூன், வசம்பு பொடி 1 ஸ்பூன், தேன் – 1 சொட்டு, இந்தப் பொருட்களையெல்லாம் அந்த மஞ்சள் துணியில் வைத்து, சிறு முடிச்சாக ஒரு நூலில் கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே வைத்து விடவேண்டும்.

neruppu

மறுநாள் காலையோ, மாலையோ உங்கள் வீட்டில் எப்போது நீங்கள் வெள்ளிக்கிழமை பூஜையை செய்வீர்களோ, அப்போது பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு,  மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டு வழக்கம் போல் பூஜை செய்த பின்பு, இந்த சிறிய முடிச்சை எடுத்து சாம்பிராணி தூபக்காலில் வைத்து, கொஞ்சமாக நெய்விட்டு எரித்துவிடவேண்டும்.

- Advertisement -

இந்த சிறிய முடிச்சை வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் வைத்து எரிப்பது, சிறிய யாகம் செய்ததற்கு சமம். சாம்பிராணி இருந்தால் அந்த முடிச்சின் மேலே கொஞ்சமாக தூவி விடுங்கள். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை, இதில் இருந்து கிடைக்கக்கூடிய நறுமணமே மிகவும் நன்றாக இருக்கும். இந்த புகை வீடு முழுவதும் பரவும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

vellai-mudichu

இந்த முடிவினை பூஜை அறையின் உள்ளே வைத்து ஏற்றினாலும் சரி, வாசலில் வைத்து ஏற்றினாலும் சரி அது உங்களுடைய இஷ்டம் தான். உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் இந்த நெருப்போடு பொசுங்க வேண்டும். இனிமையான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கவேண்டும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த முடிச்சினை பற்ற வைத்து விட்டாலே போதும். வாரம்தோறும் இப்படியாக, இந்த மஞ்சள் நிற முடிச்சு தூபத்தை வெள்ளிக்கிழமை ஏற்றி வந்தால் வீட்டில் கஷ்டங்கள் குறையும்.

dhupam

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி கரடுமுரடான வாழ்க்கை, இனிமையான வாழ்க்கையாக மாறிவிடும். இதோடு சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று வரும் சுக்கிர ஓரை நேரத்தில், உங்களுடைய வீட்டில் இனிப்பு சமைத்து, அந்த இனிப்பை எல்லோரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.

dhupam

முடிந்தால் சுத்தமான பசும்பால், பசு நெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, போன்ற பொருட்களை சேர்த்து பிரசாதம் செய்யலாம். அந்த இனிப்புப் பலகாரத்தை செய்து இறைவனுக்கு நிவேதனமாக படைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது, குடும்ப ஒற்றுமைக்கும் குடும்ப சந்தோஷத்திற்கு மிகவும் நல்லது. கஷ்டங்கள் காணாமல் போக இனிமையான வாழ்க்கையை பெறுவதற்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான வழிகளில் இதுவும் ஒன்று. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -