இன்று அமாவாசை. உங்கள் வீட்டில் இந்த 2 பொருட்களை மட்டும் சேர்த்து இப்படி வைத்து பாருங்கள். அடைக்கவே முடியாத கடனையும் அடைக்கலாம். நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியத்தையும் நடத்தி காட்டலாம்.

amavasai
- Advertisement -

நீண்ட நாட்களாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு நிறைய தடைகள் உள்ளது, எந்த ஒரு நல்ல விஷயத்தை தொடங்கினாலும் அது நமக்கு சாதகமாக அமைவது போலவே இருக்கும். ஆனால், இறுதியில் அந்த விஷயம் நமக்கு தோல்வியை கொடுத்துவிடும். இப்படி வீட்டில் ஒரு நல்ல காரியத்தை கூட நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். சாதாரணமாக எல்லோராலும் செய்யக்கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan

உங்களுடைய வீட்டில் இருக்கும் சமையலுக்குப் பயன்படுத்தாத புதியதாக இருக்கும் சுத்தமான கல் உப்பை பரிகாரத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள். இந்த மஞ்சள் பார்ப்பதற்கு முனை உடையாமல் இருக்க வேண்டும். முனை உடைந்த மஞ்சளை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் அது பலனளிக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

ஒரு மஞ்சள் நிற சதுர வடிவில் இருக்கும் சிறிய துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்யலாம். சதுர வடிவில் இருக்கும் மஞ்சள் நிற துணியில் கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த உப்பின் நடுவே முனை உடையாத மஞ்சள் கிழங்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து அப்படியே மஞ்சள் துணியில், ஒரு சிறிய முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

கல் உப்பையும், மஞ்சள் கிழங்கையும் மஞ்சள் துணியில் வைக்கும் போது உங்களுடைய கோரிக்கையை மனதார குலதெய்வத்திடமும், இந்த பிரபஞ்ச தினமும் சொல்ல வேண்டும். கடன் பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது உங்களுடைய வீட்டில் நல்லது நடப்பதற்கு முட்டுக்கட்டை இருந்தாலும் சரி அது சரியாக வேண்டும் என்று மனதார நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் கட்டி வைத்துள்ள இந்த முடிச்சு அடுத்த அமாவாசை வரை அப்படியே உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கட்டும். அடுத்த அமாவாசை பழைய உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்துவிட்டு, மஞ்சளை வீட்டில் உள்ள பெண்கள் முகத்திற்கு பூசிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. உப்பைக் கரைக்கும் போது உங்களுடைய கஷ்டங்கள் கரைந்து விட்டது என்று மனதார நினைத்து உப்பை தண்ணீரில் கரைக்க வேண்டும்.

amavasai1

மீண்டும் அமாவாசை தினத்தில் அந்த மஞ்சள் துணியை துவைத்து விட்டு மேல் சொன்ன படி மீண்டும் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, புதியதாக ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து இந்த முடிச்சை கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறு அமாவாசைக்கு இந்த உப்பை எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும். இப்படியே ஏழு மாதங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். ஏழு மாதங்களும் எந்த தடையும் இருக்கக் கூடாது. ஏழு மாதம் தொடர்ந்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் இப்படி செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய முடியாத சூழ்நிலை வந்தால் கூட வீட்டில் இருக்கும் மற்றவர்கள் இதை தவறாமல் செய்ய வேண்டும். (அமாவாசை தினத்தில் கட்டிவைத்த கல் உப்பை, மறு அமாவாசை தினத்தில்தான் தண்ணீரில் கரைக்க வேண்டும்.)

virali-manjal

உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டம் தண்ணீரில் கரைக்கும் உப்பு போல கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகும் என்பது மட்டும் உறுதி. இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயமாக படிப்படியாக கஷ்டங்கள் குறைந்து கொண்டே வருவதை கண்கூடாக காணலாம். பல சக்தி வாய்ந்த சுலபமான தாந்த்ரீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலனை பெறுவீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -