உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அம்மன் வழிபாட்டை இப்படி செய்து வந்தால்!

amman

பொதுவாகவே எல்லா தெய்வங்களும், நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த தான் செய்யும்‌. எல்லா தெய்வங்களுக்கும் அந்த சக்தி உண்டு. இருப்பினும் அம்பாள் வழிபாட்டில் அதற்கான சக்தி இன்னும் அதிகம் உண்டு என்றே சொல்லலாம். சக்தி ஸ்வரூபம், அம்பாள் வடிவம் கொண்ட உலகத்துக்கே தாயாக இருக்கக்கூடிய, அன்னையை மனமுருகி வழிபட்டால், நிச்சயமாக நமக்கு வரக்கூடிய துன்பங்களும் துயரங்களும், முன்கூட்டியே நமக்கு தெரிந்துவிடும். அந்த சக்தியை இயற்கையாகவே அம்பாள் நமக்கு கொடுத்து விடுவாள். அப்படிப்பட்ட சக்தியை, கொண்டவள் தான் சக்தி தேவி.

சில சமயங்களில், அம்பாளைத் தொடர்ந்து மனமுருகி வழிபாடு செய்பவர்களுக்கு, சில பேருக்கெல்லாம் உள்ளுணர்வு சொல்லும். தனக்கு எதோ ஒரு தீராத துயரம் வரப்போவதாக! அம்பாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் எலுமிச்சைபழ மாலை வாங்கி அணிவிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அம்பாளுக்கு புடவை சாத்த வேண்டும் என்ற எண்ணம் சில பெண்களுக்கு இயல்பாகவே தோன்றும். அப்படி இருக்கும் பட்சத்தில் அம்பாளுக்கு செய்யவேண்டிய வேண்டுதலை உடனடியாக நீங்கள் செய்து முடித்து விடுவது சிறப்பானது. இப்படியாக அம்பாளை உண்மையாக மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு நிச்சயமாக வரக்கூடிய கஷ்டங்கள் முன்கூட்டியே தெரியும். இதை உணர்ந்தால் தான் உங்களுக்கு புரியும்.

சரி, இப்போது உங்களுடைய வேண்டுதல் நிறைவேற அம்பாளுக்கு எப்படிப்பட்ட வஸ்திரத்தை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். தீராத எதிரி தொல்லை, வாழ்க்கையின் முன்னேற்றத் தடை, கடன்தொல்லை இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தால் அம்மனுக்கு சிவப்பு நிற புடவையை சாத்துவது மிகவும் நல்லது.

amman

வீட்டில் மங்களகரமான காரியங்கள், திருமணம் குழந்தைப்பேறு போன்ற பாக்கியங்கள் கிடைக்க  வேண்டுமென்றாலும், சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் போன்ற பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சுபகாரியத் தடைகள் நீங்க அம்மனுக்கு மஞ்சள் நிற புடவையை வாங்கி சாத்துவது மிகவும் நல்லது.

- Advertisement -

உங்களுடைய குழந்தைகளின் நலனுக்காக, உங்களுடைய குழந்தைகளின் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக அவர்களுடைய அறிவாற்றல் திறமை வளர வேண்டும் என்பதற்காக அம்பாளுக்கு மரகத பச்சை நிற புடவையை சாத்துவது மிகவும் நல்லது.

Amman

இதேபோல் ஒருவருக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் பெயர் புகழ் பட்டம் எல்லாம் கிடைத்து புகழின் உச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் அம்மனிடம் வேண்டிக் கொண்டு இளஞ் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற பட்டுப் புடவையை வாங்கி அணிவிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

tara-devi-amman

குடும்பம் சவுகரியமாக, சுபிட்சமாக சகல சம்பத்துடன் செழிப்பாக வாழ வேண்டுமென்றால் அம்மனுக்கு சந்தனம் அல்லது எலுமிச்சை பழ நிறப் புடவையை அணிவிக்க வேண்டும். புடவையோடு சேர்த்து ஆபரணங்களையும், அலங்காரப் பொருட்களையும் அம்மனுக்காக வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. ஆபரணங்கள் அலங்காரப் பொருட்கள் என்றால் தங்கத்தில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் இயன்ற அளவு பித்தளையால் செய்யப்பட்ட நகை நட்டுகளை வாங்கி கொடுத்தாலும் அது சிறப்பினை தேடித்தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை(19/2/2021) ‘கார்த்திகை விரதம்’ அன்று வீட்டில் இப்படி வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் கிடைக்குமாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.