நாளை(19/2/2021) ‘கார்த்திகை விரதம்’ அன்று வீட்டில் இப்படி வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் கிடைக்குமாம்!

murugan
- Advertisement -

மாதங்களில் கார்த்திகை மாதம் முருகனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அது போல் கார்த்திகை நட்சத்திரம் வரும் அன்று முருகனுக்கு விசேஷமான பூஜைகளும், வழிபாடுகளும் கோவில்களில் செய்யப்படுவது வழக்கம். மாதா மாதம் வரும் கார்த்திகை அன்று முருகனை வீட்டில் வழிபடுவதன் மூலம் வாழ்வில் எவ்வளவு கீழ் நிலையில் இருந்தாலும், மேல்நோக்கி கோபுரத்தின் உச்சிக்கே செல்லலாம். அந்த அளவிற்கு அதிகமாக பலன் தரும் முருகப் பெருமான் கார்த்திகை வழிபாடு வீட்டிலேயே எளிதாக செய்யலாம். நாளை(19/2/2021) கார்த்திகை விரதம் அன்று இது போல் வழிபாடு செய்தால் முருகனுடைய பரிபூரண அருளும், சகல சம்பத்துகளும் உங்களுக்கு கிடைக்கும். அதை எப்படி செய்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

murugan

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று வீட்டில் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்வது நல்லது. இப்படி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை இன்னல்களும் நீங்கி, இனி வர இருக்கும் ஆபத்துகளும் உங்களை நெருங்காமல் ஓடி விடும். முருகன் காக்கும் கடவுளாக நின்று உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பார்.

- Advertisement -

கார்த்திகை நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அன்று காலையில் எழுந்து வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும். பூஜையில் முருகன் படத்தை வைத்து சந்தன, குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முருகன் சிலை வைத்திருப்பவர்கள் தண்ணீர், பால், மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்து கொள்வது நல்லது.

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகனை வணங்கும் விதமாக 6 அகல் விளக்குகளை தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இது போல் அந்த அகல் விளக்குகளை வைத்தே பூஜையும் செய்யலாம். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றலாம். அல்லது மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றுவது கூடுதல் பலன்களை கொடுக்கும். இதன் திரியை மஞ்சளில் தோய்த்து முதலிலேயே காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகள் 6 மணிக்கு ஏற்றி வைத்து கார்த்திகை விரதம் இருந்து உணவேதும் உண்ணாமல் இருப்பவர்களுக்கு திருமண தடை, தொழில் தடை, வருமான தடை, மனக்கஷ்டம், குழப்பம் என்று எந்த பிரச்சனைகளும் எளிதில் தீர்வதாக ஐதீகம் உள்ளது. காலையில் இருந்து மாலை விளக்கேற்றி முடியும் வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

agal-vilakku

ஆறு மணிக்கு விளக்குகளை ஏற்றி வைத்து முருகனுக்குரிய கவசங்கள், பாராயணங்கள், ஸ்லோகங்கள் மந்திரங்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவற்றை வாசிக்க வேண்டும். ஸ்கந்த குரு கவசம் பாடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இறை அருளை முழுமையாகப் பெற்று தரும். வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடலாம். பின்னர் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். நைவேத்தியமாக அவல் பொரி, பனை ஓலை கொழுக்கட்டை போன்றவற்றை வைப்பது விசேஷமான பலன்களைத் கொடுக்கும். இதை செய்பவர்களுக்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

om-mantra

தீப, தூப ஆராதனைகள் காண்பித்த பின் ஓம் என்னும் மந்திரத்தை அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். ஓம் என்னும் பிரணவ மந்திரம் உங்களை எதிர்க்கும் அத்தனை எதிரிகளையும் தவிடு பொடி ஆக்கும் ஆற்றல் படைத்தது. அதனை கார்த்திகை விரதம் அன்று உச்சரித்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பதே இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கோவிலுக்கு செல்ல நினைப்பவர்கள் அன்று மாலை முருகன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கி தரலாம். முருகன் அருள் இருந்தால் நம்மை நோக்கி வரும் எல்லா ஆபத்துகளும் நீங்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை வீட்டின் பூஜை அறையில் வைத்தால் வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் நொடியில் தவிடுபொடியாகும்! என்ன பொருள் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -