வருடத்திற்கு ஒருமுறை இந்த காயை தலையை சுற்றி தூக்கி வீசி எறிந்தால் போதும். உங்கள் கஷ்டங்கள், பீடை, தரித்திரம், அனைத்தும் உங்களை விட்டு தூரம் சென்று விடும்.

kalarchi-kai
- Advertisement -

சில சமயம் நாம் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்கள் நம் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத துன்பங்கள் வந்து நம்மை வாட்டி வதைப்பதற்கு காரணம் நம்மை அறியாமலேயே நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கும் பிடையும் தரித்திரமும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது தானாக எங்கிருந்தோ வருவது கிடையாது. நாமாக தேடிக்கொள்வது தான். சோம்பேறித்தனம், இயலாமை, மனச்சோர்வு, தோல்வியை கண்டு பயப்படுவது, இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களிடத்தில் நிச்சயமாக பிடையும் தரித்திரமும் கஷ்டங்களும் வந்து தொற்றிக் கொள்ள தான் செய்யும்.

ஆகவே, வாழ்க்கையில் எது நடந்தாலும் எதிர்த்து போராடும் குணம் கொண்டவர்களாக எப்போதுமே நாம் இருக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறித்தனத்தை, இயலாமையை நம் உடம்பிற்குள், மூளைக்குள், மனதிற்குள் கொண்டு போக விடக்கூடாது என்ற ஒரு நல்ல தகவலோடு இந்த பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

மகத்துவமும் மருத்துவமும் சேர்ந்த ஒரு காயைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கழற்சிக்காய், நிறைய பேருக்கு இந்தக் காயைப் பற்றி தெரிந்திருக்கலாம். நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. கழற்சிக்காய் என்பது ஒரு கொடிவகையைச் சார்ந்தது. கொடியில் காய்க்கக் கூடிய இந்த காய்க்கு மருத்துவ குணம் ஏராளம். உடலில் இருக்கும் வியாதிகளுக்கு இந்தக் காயின் மூலம் எப்படி தீர்வு கிடைக்கிறதோ, அதே போல் தான் நம் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலுக்கும் நம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டத்திற்கும் தீர்வினை கொடுக்க முடியும். கஷ்டத்தை நம்மிடமிருந்து துரத்தி அடிக்க கூடிய கழர்ச்சிக்காய் பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கழற்சிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை 11 என்ற கணக்கில் வாங்கி கொள்ள வேண்டும். வாங்கி வந்த காய்களை ஒரு துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து இரவு முழுவதும் படுத்து உறங்க வேண்டும். எந்த துணியில் வேண்டுமென்றாலும் இந்த காயை முடிச்சுப் போட்டுக் கொள்ளலாம். ஒரு கையை குட்டையாக இருந்தாலும் பரவாயில்லை. மறுநாள் காலை இந்த முடிச்சை அப்படியே வெளியில் எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது உங்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தூரமாக ஒதுக்குப்புறமாக எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்.

- Advertisement -

அந்த இடத்திற்கு சென்று துண்யில் முடித்திருக்கும் கழர்ச்சிக்காயை ஒவ்வொன்றாக எடுத்து உங்கள் தலையை சுற்றி தூரமா வீசி எறிந்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு காயாக தூரம் வீசி எறியும் போதும் உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், உங்களை பிடித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரமும் உங்களை விட்டு நீங்கிவிடும். எப்படிப்பட்ட வெளியில் சொல்ல முடியாத துன்பமாக இருந்தாலும் அது படிப்படியாக குறைய தொடங்கும்.

sleep1

இப்படியாக இந்த பரிகாரத்தை வருடத்திற்கு ஒரே ஒரு முறை செய்து கொண்டாலும் போதும். நம் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி வெளியேற்றக் கூடிய தன்மை இந்த காய்க்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி வர முடியாத சூழ்நிலை இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களின் துணையோடு இந்த காயை உங்களின் கைகளாலேயே எடுத்து சென்று இந்த பரிகாரத்தை பாதுகாப்போடு செய்து முடித்து நல்ல பலனைப் பெறுங்கள். நல்லது நினைத்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு நன்மையை மட்டுமே தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -