- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தொலைந்து போக பரிகாரம்

கஷ்டங்கள் தொலைந்து போக பரிகாரம்

- Advertisement -

நமக்கும் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடங்கள் கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் தீர வேண்டும் என்றுதான் இறை வழிபாடு செய்கின்றோம். மன நிம்மதி வேண்டி தான் கோவிலுக்கு செல்கின்றோம். ஆனால் கோவிலுக்கு செல்பவர்கள் எல்லோருக்கும் வேண்டுதல் நிறைவேறுகிறதா, கஷ்டங்கள் தீருகின்றதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.

ஒரு சிலருடைய வேண்டுதல் சீக்கிரம் பலித்து விடும். ஒரு சிலருடைய வேண்டுதல் கர்ம வினையின் காரணமாக பலிப்பதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும். அதற்காக கடவுள் இல்லை என்று நாம் சொல்லி விட முடியாது. கடவுள் இருப்பதனால் தான் இன்று நாம் உயிரோடு இருக்கின்றோம். இந்த லோகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும். உங்களுடைய துன்பங்கள் தீர வேண்டும் உங்களுடைய கர்ம வினையால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒழிய வேண்டும் என்றால் பின் சொல்லக் கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக மட்டுமே.

- Advertisement -

கஷ்டம் தீர வழிபாடு

கர்ம வினைகள் கரைய, உங்கள் பிரச்சனைகள் தீர கோவிலுக்கு செல்லும்போது நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள் 2 எலுமிச்சம்பழம். முதலில் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்து விடுங்கள். இறைவனை வணங்கிக் கொள்ளுங்கள். உங்கள் கர்ம வினைகள் கரைய வேண்டும் என்றால் நம்மை நாமே வருத்திக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும்.

அதற்காக ரொம்பவும் கடுமையான வேண்டுதலை தான் வைக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. உங்களுடைய கால் வலிக்கும் அளவுக்கு அந்த கோவில் பிரகாரத்தை வலம் வாருங்கள். அதாவது கோவிலை சுற்றிவர வேண்டும். கணக்கு வைக்க வேண்டாம். கோவிலை சுற்றி சுற்றி கால்கள் ஓய்ந்து, உடம்பு சோர்ந்து போகும் சமயத்தில், கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து, உங்களுடைய பிரார்த்தனை வைக்கவும்.

- Advertisement -

(ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளவர்கள், நடந்தால் மூச்சு வாங்கும், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் இதை மேற்கொள்ள வேண்டாம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த வழிபாட்டை செய்யவும்.) பிறகு கையில் இரண்டு எலுமிச்சம் பழம் வைத்திருக்கிறீர்கள். ஒரு எலுமிச்சம்பழத்தை சாமியிடம் கொடுத்து அவர் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இன்னொரு எலுமிச்சம் பழத்தை சுவாமிக்கு விளக்கு போட வேண்டும்.

துர்க்கை அம்பாளுக்கு செவ்வாய்க்கிழமை, ராகு காலத்தில் இந்த விளக்கு போடுவது ரொம்ப சிறப்பு என்று சொல்லுவார்கள். இந்த எலுமிச்சம் பழம் விளக்கு போடக்கூடாது என்று ஒரு தரப்பினரால் சொல்லப்படுகிறது. ஆனால் காலம் காலமாக செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த எலுமிச்சம் பழம் விளக்கு போட்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதை தலைகீழாக திருப்பி, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்திலேயே இந்த பரிகாரத்தை செய்தாலும் சரிதான், அல்லது அந்த நேரத்திற்கு சரியாக உங்களால் போக முடியவில்லை, அந்த கிழமையில் போக முடியவில்லை என்றால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்க கூடிய கோவிலில் மேல் சொன்ன வழிபாட்டை மேற்கொண்டாலும் நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிக்கலாமே: மாணவர்கள் ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு

சுவாமியின் பாதத்திலிருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி கையில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா அதை வீட்டிற்கு கொண்டு வந்து அறுத்து சாறு பிழிந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம், இதை செய்து பாருங்கள். உங்கள் கஷ்டம் உடனடியாக தீரும்.

சற்று முன்