உங்கள் கஷ்டங்கள் நீங்க செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன தெரியுமா? இதை செய்யாமல் புலம்பி என்ன பயன்?

gopuram-sad-dhanam
- Advertisement -

மனிதனாய் பிறந்த எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் கஷ்டங்களை அனுபவிப்பது தான் நியதி. தனக்கு மட்டும் தான் கஷ்டம் என்றும், மற்றவர்களுக்கு எல்லாம் ஏதோ எந்த கஷ்டமும் இல்லாதது போலும் சதா புலம்பிக் கொண்டே இருக்கக் கூடாது. இப்படி புலம்பினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, மாறாக இதனால் உங்களுக்கு எதிர் விளைவுகள் தான் ஏற்படும். கஷ்டத்தை நினைத்து புலம்புபவர்கள், கஷ்டங்கள் நீங்க செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

sad-crying

ஒருவரிடம் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வது நம் கஷ்டத்தை போக்கும் என்று ஒரு புறம் நம்பினாலும் இன்னொரு புறம் இப்போது இருக்கும் காலகட்டத்தில் நம் கஷ்டத்தை கண்டு எவரும் இரக்கப்பட்டு உதவப் போவது இல்லை என்பதையும் தெளிய வேண்டும். அப்படி உங்கள் கஷ்டத்தை நீங்கள் அடுத்தவரிடம் புலம்பும் பொழுது அதை மற்றவர்களிடன் கூறி எள்ளி நகையாடுவதும், நம்மை இன்னும் கீழாக நினைப்பதும் தான் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

- Advertisement -

என்னதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் கூட நம் துன்பத்தில் அவர்கள் பங்கு பெற்றுக் கொள்ள முடியாது. உங்களை நினைத்து பரிதாபப்பட்டு உச்சுக் கொட்டி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் இப்படி நீங்கள் உங்கள் கஷ்டங்களை அடுத்தவர்களிடம் புலம்பும் பொழுது உங்களுக்கு இயல்பாக எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்ற ஆரம்பிக்கும்.

sad-man

ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது அது ஆழ்மனதை சென்று ஆட்கொண்டு விடும். இதனால் உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களும் அதே போல அடுத்தடுத்து பிரதிபலிக்க ஆரம்பிக்கும். உங்களை நீங்களே தாழ்வுப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியை தழுவும். தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கு வழியாகும்.

- Advertisement -

ஆன்மீக ரீதியாகவும் இது போன்ற எதிர்மறை விஷயங்களை ஒருவர் தொடர்ந்து கூறி கொண்டிருந்தால் அவர்களுக்கு மூதேவி என்கிற தரித்திரம் பிடித்துக் கொள்ளுமாம். கஷ்டங்களைக் கண்டு அஞ்சுவதும், அதை நினைத்து எப்பொழுதும் புலம்பி கொண்டிருப்பதும் எதிர்மறை எண்ணத்தை உங்களுக்கு மட்டும் அல்லாமல் நீங்கள் யாரிடம் அதைப் பற்றி கூறுகிறார்களோ, அவர்களும் தொற்றிக் கொள்ளும். இது போன்று உங்களிடம் யாராவது அடிக்கடி புலம்பினால் அவர்களிடம் இருந்து சற்று தள்ளி செல்வதே நல்லது. நமக்கு துன்பத்தை கொடுப்பவனும், இன்பத்தை கொடுப்பவனும் இறைவன் ஒருவனே ஆவான்.

praying-god

எனவே உங்களுக்கு எந்த ஒரு கஷ்டம் நேர்ந்தாலும், துன்பம் மனதை போட்டு வாட்டினாலும் உடனே கோவிலுக்கு சென்று அங்கு அமைதியாக அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களையும், துன்பங்களையும் இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அதைப் பற்றிய சிந்தனையை முற்றிலுமாக தவிர்த்து மனதை வேறு ஒரு விஷயத்தில் கொண்டு சென்று விடுங்கள். நீங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை எந்த காலத்திலும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாது. யாராவது உங்களிடம் நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்டால், ஆமாம்! நான் நன்றாக இருக்கிறேன், என்று தான் கூற வேண்டும். ஏதோ இருக்கிறேன்! எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது! என்றெல்லாம் கூறக் கூடாது.

food

ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்றாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இருப்பதை மட்டும் வைத்து உள்ளம் மகிழ்ந்து பாருங்கள். உங்களை தேடி தானாகவே அனைத்து செல்வங்களும் வந்து சேரும். இந்த நிலையில் கூட நீங்கள் மற்றவர்களின் பசியை போக்க அன்னதானம் அதாவது உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் எத்தகைய துன்பங்களும் உங்களை விட்டு நீங்கி விரைவாக ஓடி சென்று விடும். இத்தகைய இன்பங்களை விடுத்து சதா புலம்பி கொண்டிருப்பதில் என்ன பயன்? என்பதை நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள்.

- Advertisement -