- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டம் தீர்க்கும் உப்பு

கஷ்டம் தீர்க்கும் உப்பு

- Advertisement -

குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்களும், பிரச்சினைகளும் வந்து கொண்டே இருந்தால், அந்த இடத்தில் ஏதோ ஒரு நெகட்டிவ் சக்தி ஆக்கிரமித்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய் படுவது, வேலை பறிபோவது, திடீரென ரத்த காயம் அடிக்கடி ஏற்படுவது, பொருளாதார ரீதியாக திடீரென சரிவுகளை சந்திப்பது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால், இந்த எளிய உப்பு பரிகாரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். கஷ்டம் தீரும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

கஷ்டம் வரும் போது துவண்டு போகாமல், இறைவனை நொந்து கொள்ளாமல் முழு நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள். நமக்கு நல்ல விஷயம் நடக்கும் பொழுதெல்லாம், இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். அதுவே கெட்ட விஷயம் நடக்கும் போது இறைவனே இல்லை என்று சொல்லிவிடுகிறோம். இது முற்றிலும் தவறான ஒரு விஷயம். நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்ல தவறாமல் இருப்பதும், கெட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது நொந்து கொள்ளாமல் இருப்பதும் தான் உண்மையான பக்தி.

- Advertisement -

தெய்வீக சக்தியை உணர இது போன்ற சிறு சிறு சோதனைகள் உங்களுக்கு வரக்கூடும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை காணவும், நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அடிக்கடி வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் வெள்ளிக்கிழமையில் காலையில் கடைக்கு சென்று 10 லிருந்து 11 மணிக்குள் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்கி வாருங்கள்.

நீங்கள் வாங்கும் உப்பு, கல் உப்பாக தான் இருக்க வேண்டும். கல் உப்பில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார். வாங்கி வந்த உடன் பெருமாள் கோவிலுக்கு சென்று, அவரின் பாதத்தில் வைத்து கஷ்டங்கள் தீர மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்னும் இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்லுங்கள். பின்னர் இந்த உப்பை வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வணங்கி விட்டு, நீங்கள் அன்றாடம் சமைக்கும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய உப்புடன் சேர்த்து கலந்து வையுங்கள்.

- Advertisement -

பின்னர் தினமும் இந்த உப்பினை சமையலுக்கு பயன்படுத்துங்கள். முடிந்தவரை எந்த சமையலில் எல்லாம் கல் உப்பு பயன்படுத்த முடியுமோ, பயன்படுத்துங்கள். தூள் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் உணவில் உப்பினை எப்போதும் குறைவாக சாப்பிட வேண்டும். குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, கண்டிப்பாக கூடி விடக்கூடாது. இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இப்படி 48 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வர, சீக்கிரமே குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து, தொழில் ரீதியான தடைகள் அகன்று போய், பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை நீங்கள் சந்திப்பீர்கள் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம்

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள். உப்பு என்பது உணவு பொருள் மட்டும் அல்ல! அது உணவினை ருசியாக்க கூடியது. பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் இந்த உப்பில் மகாலட்சுமியின் அருளும், மகாவிஷ்ணுவின் அருளும் ஒரு சேர கிடைக்கிறது. இதை பெருமாளின் பாதத்தில் பூஜை செய்து கொண்டு வந்து வீட்டில் சமைத்து சாப்பிடும் பொழுது, உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் மறையும் என்பது ஐதீகம்.

சற்று முன்