வெளியில் சொல்லவே முடியாத எவ்வளவு பெரிய மன கஷ்டமாக இருந்தாலும் அதை சரி செய்ய, சிவபெருமானைத் தொடர்ந்து 11 நாட்கள் இப்படி வழிபட்டாலே போதும்.

shiva-lingam
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வெளியில் சொல்லவே முடியாத அளவிற்கு கஷ்டங்கள், மனக் கவலைகள் இருக்கத்தான் செய்யும். யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களை நிச்சயமாக இறைவனின் செவிகளில் தான் சொல்ல வேண்டும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. இறைவனின் பாதங்களில் எல்லா கஷ்டங்களையும், மன பாரத்தையும் இறக்கி வைத்து விட்டால், நிச்சயம் அவன் பார்த்துக்கொள்வான். இந்த ஒரு நம்பிக்கையை போதும் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்தி செல்ல. கஷ்டத்தை எதிர்கொண்டு, போராடக் கூடிய வாழ்க்கையின் தான் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும்.

runavimosana-lingam

பொதுவாகவே கோவில்கள் என்றால் மூன்று கால பூஜை கட்டாயமாக நடக்கும். அதாவது காலை நேர பூஜை, உச்சிக்கால பூஜை, நடையை சாத்துவதற்கு முன்பாக இரவு நேரத்திலும் பூஜை செய்வார்கள். சிறிய கோவில்களில் மூன்று கால பூஜை நடைபெறும். கொஞ்சம் பெரிய அளவில் இருக்கக்கூடிய கோவில்களில், ஐந்து கால பூஜை நடத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இதில் மனக் குறையைப் போக்கிக் கொள்ள, இரவு நேரத்தில் செய்யக் கூடிய பூஜையில் தான் நாம் கலந்து கொண்டு, எம் பெருமானை வழிபாடு செய்யவேண்டும். இரவு நேரம் என்பது சந்திர பகவானை குறிப்பது. மனரீதியாக நமக்கு பிரச்சனைகள் இருந்தால், மனசு கஷ்டப்படும் அளவிற்கு துயரங்கள் இருந்தால், மனக் கவலையை போக்க வேண்டுமென்றால் அதற்கு சந்திரனின் ஆசீர்வாதம் நமக்குத் தேவை. நம்முடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் வலுவிழுந்தாலும் மனக்கஷ்டங்கள் நம்மைத் தேடி வரத் தான் செய்யும்.

chandran

ஆக இரவு என்பது சந்திர பகவானுக்கு உரியது. அந்த நேரத்தில் சிவன் கோவில்களுக்கு சென்று ஒரு டம்ளர் பசும்பாலில் சர்க்கரை கலந்து, அதை இறைவனுக்கு நிவேதனமாக படைத்து, அந்த மாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். மாலை நேரத்தில் என்றால், இரவு 7 மணிக்கு மேல் நீங்கள் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று செய்யலாம்.

- Advertisement -

தொடர்ந்து 11 நாட்கள் தீராத மனக்கவலை தீர வேண்டும் என்று இந்த வேண்டுதலை சிவபெருமானிடம் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் கஷ்டம், மன அழுத்தம் மன சஞ்சலம் எல்லாமே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சந்தியா கால வேளையில், சந்திரபகவானின் ஒளிக்கதிர்கள் இந்த பூமிக்கு வரும் சமயத்தில், சிவன் கோவிலை 3 முறை வலம் வர வேண்டும். சிவன் கோவிலை வலம் வந்து கொண்டே கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.

Nanthi

இதோடு சேர்த்து பிரதோஷ காலத்தில் தொடர்ந்து நந்தி பகவானின் செவிகளில் உங்களது வேண்டுதலை சொல்லி பாருங்கள். மனக்குறையை கூறி வாருங்கள். கூடிய விரைவில் உங்களுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறக்கும். அந்த ஈசனை நினைத்து, முழுமனதோடு வழிபாடு செய்தவர்கள் என்றுமே கைவிடப்பட்டதாக சரித்திரம் கிடையாது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -