- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் விலக சங்கடஹர சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

கஷ்டங்கள் விலக சங்கடஹர சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரக்கூடிய தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியை தான் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினம் கண்டிப்பான முறையில் அனைவரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி அவரை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும். நம்முடைய கஷ்டங்கள் தீரவும் நன்மைகள் பெருகவும் அன்றைய தினம் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டங்கள் விலக சங்கடஹர சதுர்த்தி

முழுமுதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானை வணங்காமல் எந்த ஒரு காரியத்தையும் தடையின்றி செய்ய முடியாது என்பதால் முதல் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தெய்வமாக திகழ்வர் விநாயகர் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய தினமாக கருதப்படுவது தான் விநாயகர் சதுர்த்தி. இது அவருடைய பிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம்.

- Advertisement -

இந்த மகா சங்கடஹர சதுர்த்தி வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் தொடங்குகிறது. அன்றைய தினம் நாம் விநாயகர் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாடு மட்டும் செய்யலாம். அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய விநாயகரின் அபிஷேகத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பதோடு அருகம்புல் மாலையும் வாங்கி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டிலேயே விநாயகர் சிலை வைத்திருப்பவர்கள் விநாயக பெருமானுக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தேன் அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. விநாயக பெருமானுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேன், அவல், பொறி, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்றவற்றிலிருந்து எது உங்களால் செய்ய இயலுமோ அதை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி நெய்வேத்தியமாக வைத்த பிறகு 11 அகல்விளக்குகளை எடுத்து அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானுக்கு முன்பாக இந்த அகல் விளக்கை ஒரே நேர்கோட்டில் கிழக்கு பார்த்தவாறு அல்லது வடக்கு பார்த்தவாறு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த அகல்விளக்குகள் தரையில் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு இலையை பயன்படுத்தி அதற்கு மேல் வைத்து தான் ஏற்ற வேண்டும். வெற்றிலை, மா இலை, வாழை இலை, எருக்கு இலை, வேப்ப இலை என்று எந்த இலை கிடைத்தாலும் அந்த இலையை வைத்து நாம் தீபம் ஏற்றலாம்.

இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓத் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எறியலாம். பிறகு இதை குளிர வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:தீராத நோய் தீர வாராஹி வழிபாடு

இந்த முறையில் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வீட்டில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாத நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்