அட, இந்தப் பிள்ளையாரை வியாழக்கிழமை அன்று கும்பிட்டு வந்தால், வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே!

vinayagar-1

இந்த பணத்தை சம்பாதிப்பதில் தான் எத்தனை போராட்டம். எவ்வளவு கஷ்டங்கள். என்ன செய்தாலும், பணத்தை சம்பாதிக்க முடியவில்லை! அப்படியே அடித்து பிடித்து அந்த பணத்தை சம்பாதித்தாலும், சேமிப்பில் வைக்க முடியவில்லை. சேமிப்பில் வைத்தாலும் அந்த பணம் எங்கே வீண்விரயம் ஆகி விடுமோ என்ற பயம். மனிதனாக பிறந்து விட்டோம் அல்லவா? இந்த கஷ்ட நஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. சரி, இந்த கஷ்டங்களில் இருந்து முழுமையாக தப்பித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், சில வழிபாட்டு முறைகளை செய்வதன் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டத்தை தடுக்க முடியும். அந்த வரிசையில் இன்று மிக மிக சுலபமான முறையில் விநாயகர் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kashturi-manjal

விக்னங்களை தீர்த்து வைப்பதில் இந்த விநாயகருக்கு முதலிடம். கூப்பிட்ட குரலுக்கு உடனடியாக ஓடிவந்து நம்முடைய கஷ்டங்களுக்கு செவி கொடுப்பவர் விநாயகர். வியாழக்கிழமை என்றாலே அது குரு பகவானுக்கு உரியது. குரு பார்க்க கோடி நன்மை. இன்று குரு பகவானுக்கு உரிய ஒரு பொருளையும், விநாயகரையும் சேர்த்து ஒரு பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்வோமா? குருவும் விநாயகரும் சேரும் போது நமக்கு வெற்றி நிச்சயம்.

மஞ்சள் நிற பொருளில், இந்த கஸ்தூரி மஞ்சள் குரு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கஸ்தூரி மஞ்சளுக்கு பணத்தை வசியப்படுத்தும் தன்மையும் உண்டு. இந்த கஸ்தூரி மஞ்சளை, கிழங்காக வாங்கியும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் கிடைத்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

manjal-pillaiyar3

சுத்தமான கஸ்தூரி மஞ்சளை கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து, ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து கொள்ளுங்கள். இந்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு வெற்றிலையின் மேல் வைத்து, பிள்ளையாருக்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு பூ வைத்து இதை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். வியாழக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்யலாம்.

இந்த மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து விட்டு, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, விநாயகரையும் குருபகவானையும், குலதெய்வத்தையும் மனதார வேண்டி, வீட்டில் இருக்கக் கூடிய பண கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும், பணம் சேமிப்பில் தங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தாலே போதும். உங்களுடைய வீட்டில் பணம் விரயம் ஆவது படிப்படியாக குறையத் தொடங்கும்.

guru-bagavan

பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களுக்கு செல்லும்போது, வங்கிகளுக்கு செல்லும்போது, கடன் வாங்கும்போது, கடன் கொடுக்கும்போது, எப்போதுமே ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கை உங்கள் பர்ஸிலோ, ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும். நீங்களும் தொடர்ந்து 5 வியாழக் கிழமை இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கைக்கு வரக்கூடிய வருமானம் வீண் செலவு ஆகாமல், சேமிப்பில் தங்க இந்த வழிபாடு நிச்சயமாக நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.