காத்து கருப்பு கண்திருஷ்டி, வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, நிலவாசலில் இந்தப் பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து கட்டினாலே போதும்!

நல்ல சக்தியாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும் நம்முடைய வீட்டு நிலவாசலின் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆகையால் எப்போதுமே நம் வீட்டு வாசற்படியை மங்களகரமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் நிலவாசல்படியை போலவே, உங்கள் வீட்டு ஜன்னல் கதவுகளையும், மங்களகரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது, நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. நம் வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளில் கூட, மஞ்சள் குங்குமம் வைப்பது நல்லது. ஜன்னலின் வழியாகவும், கெட்ட சக்தி நுழையும் என்பது குறிப்பிடத்தக்கதது. இனி நில வாசல்படிக்கு பொட்டு வைக்கும் போது, சேர்த்து ஜன்னல் கதவுக்கும் ஒரு மஞ்சள் குங்கும பொட்டை வைக்க மறந்துவிடாதீர்கள்.

entry-storm-sliding-doors

சரி. நம்முடைய வீட்டிற்குள், காத்து கருப்பு, கண்திருஷ்டி, துர் தேவதைகள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அண்டாமல் இருக்க நில வாசப்படியில் தோரணம் கட்டுவதை வழக்கமாக வைத்திருப்போம். இதோடு சேர்த்து, வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க பின்வரும் இந்த குறிப்பை பின்பற்றினால் மிகவும் நல்லது. மங்களகரமான, குறிப்பிட்ட சில பொருட்களை ஒன்றாக வைக்கும் போது, அதனுடைய பலன் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன? இந்த பரிகாரத்தை முறைப்படி எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று, சதுர வடிவிலான மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில், பச்சரிசியில் மஞ்சள் தூளைப் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அட்சதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின், மஞ்சள் கிழங்கு 1, ஒரு ரூபாய் நாணயம் 1, சின்ன படிகாரம்,  ஒரு எலுமிச்சை இவைகளை ஒன்றாக வைத்து, துணியில் மூட்டையாகக் கட்ட வேண்டும்.

atchathai

இந்த மூட்டையைப் கட்டாயம் பூணூலில் தான் கட்ட வேண்டும். பூணூலை வாங்கி, அதை மஞ்சள் தண்ணீரில் நனைத்து, சிறிது நேரம் நிழலில், உலர வைத்து விட்டு, அதன் பின்பு அந்த பூணூலை, பயன்படுத்தி இந்த மூட்டையை முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். பூணூலை வெட்டக் கூடாது. முடிச்சுக்கு ஏற்றவாறு, தேவையான அளவு மடித்து தயார் செய்து, கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மூட்டையை கட்டும் போது, மனதிற்குள் குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை வேண்டிக் கொண்ட பின்பு, மும்மூர்த்திகளான பிரம்மா சிவன் விஷ்ணு மூவரையும் வேண்டி, அம்பாளின் பெயரை உச்சரித்து உங்கள் வீட்டு நிலை வாசற் படியில், இந்த மூட்டையை, தொங்கவிட வேண்டும்.

murugan

வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மூட்டையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை மட்டும் வெளியில் எடுத்து, உங்கள் வீட்டை மூன்று முறை சுற்றி அந்த எலுமிச்சை பழத்தை, கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டு விடுங்கள். (ஞாயிற்றுக்கிழமை அன்று, எலுமிச்சை பழத்தை எடுக்கும்போது, மற்றொரு புதிய எலுமிச்சை பழத்தை அந்த மூட்டையில் வைத்து கட்டிவிடலாம்.) உங்கள் வீட்டை பிடித்திருக்கும் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, காத்து கருப்பாக இருந்தாலும் சரி கண்ணுக்குத் தெரியாமல், காணாமல் போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றபடி இந்த மூட்டையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அப்படியே இருக்கட்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை அட்சதையை மட்டும், மாற்றி கட்டி வைத்தால் போதும்.

lemon1

சிலருக்கு வீட்டில் நிம்மதியான தூக்கம் இருக்காது. கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லாத நிலைமை ஏற்படும். வீட்டிற்குள் வந்தால் சண்டை சச்சரவு ஏற்படும். இப்படிப்பட்ட சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட கண்ணுக்கு தெரியாத துர்தேவதைகள் தான் காரணமாக இருக்கும். அவைகள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு வகையில் நம்மைச் சுற்றி, நாமே ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பல்லியை விரட்டினால் பணப் பிரச்சனை வருமா? மயிலிறகு வீட்டில் எப்படி வைத்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.