அதிர்ஷ்டத்தை தடை செய்யுமா இந்தச் செடி? கற்றாழை கற்றுக் கொடுக்கும் சங்கதி என்ன?

katrazhai-thirusti-ganapathi
- Advertisement -

இயற்கையாக வளரும் செடி, கொடிகள் ஒரு மனிதனுக்கு நன்மையை செய்தாலும், எல்லா விதமான செடிகளும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்து விடும் என்று ஒரேயடியாக கூறி விட முடியாது. கள்ளிச்செடி விஷத்தை கக்கும் என்றால், கரும்புச் செடி இனிப்பை அள்ளித் தெளிக்கும். இப்படி ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் உள்ளது. அதில் கற்றாழை அதிர்ஷ்டத்தை தடை செய்யுமா? கற்றாழையின் பயன்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதில் ஒரு சில செடிகள் உதாரணமாக கொண்டுள்ளது. நெல்லிக்காயில் மகாலட்சுமியின் அம்சம் இருப்பதால் நெல்லிக்கனி செடியை வளர்ப்பவர்களுக்கு இழப்புகள் என்பதே ஏற்படாது. தொடர்ந்து தங்கு தடையில்லாத வருமானம் இருக்கும் என்பது நம்பிக்கை. அதே போல துளசியும் அப்படித் தான். துளசியில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஆன்மீக நலன்களும் ஏராளம்.

- Advertisement -

வேண்டிய வேண்டுதல்கள் விரைவில் பலிக்க ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் துளசியை 9 முறை வலம் வந்து அதற்கு உரிய முறையில் பூஜை செய்து வந்தால் நிச்சயம் நடந்தேறும் என்பது நியதி. மாதுளை செடி, மரம் வீட்டில் இருந்தால் நிச்சயம் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது. எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படாமல் முன்னேற்றம் உண்டாகும்.

மருதாணி செடி அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய செடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டிற்கு முன் மருதாணி செடி வைத்திருப்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கெட்ட சக்திகளை ஏவி விட முடியாது. இந்தச் செடிகள் எல்லாம் வீட்டில் இருந்தால் பில்லி, சூனியம், ஏவல் எதையும் அந்த வீட்டில் செய்ய முடியாது.

- Advertisement -

அந்த வகையில் கண் திருஷ்டிக்காக கட்டப்படும் கற்றாழை நமக்கு அதிர்ஷ்டத்தை தடை செய்யும் என்று கூறப்படுகிறது. சிலருடைய வீடுகளில் பார்த்தால் கற்றாழையை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள். கற்றாழை நல்ல குணங்களை கொண்டுள்ள, நல்ல ஆற்றல்களை இழுத்து, கெட்ட ஆற்றல்களை வெளித்தள்ள கூடிய அற்புத சக்தி வாய்ந்த ஒரு மூலிகைச் செடியாகும். இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் என்றாலும் ஆன்மீக சக்தியும் கொண்டுள்ள இந்த கற்றாழைச் செடியை வீட்டின் முன் வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டம் நிறைந்தது ஆகும்.

முட்செடிகளை எப்பொழுதும் முன் வாசல் பகுதியில் வைத்து வளர்க்கக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் இந்த கற்றாழை அதற்கு விதிவிலக்காக இருக்கிறது. இதில் முட்கள் இருந்தாலும், அதிர்ஷ்டங்களை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடிய, நல்ல தெய்வங்களை அழைக்கக்கூடிய ஆற்றல் கற்றாழைக்கு உண்டு என்று நம்பப்படுகிறது. இதனால் அதனை தலைகீழாக கட்டி தொங்க விடுவதால் அதிர்ஷ்டம் தடைபடுவதற்கு காரணமாக அமையும் என்கிற ஒரு கருத்தும் உண்டு.

கற்றாழை செடி ஒரு முறை முற்றிய பின்பு மீண்டும் அது கிளைகளை பரப்புவது இல்லை. வாழை குலை தள்ளுவது போல அடுத்த கற்றாழை செடியை முளைக்கச் செய்யும். இப்படி பயன்படாத முற்றிய கற்றாழையை பறித்து கண் திருஷ்டிக்காக வீட்டில் மாட்டுவதில் எந்த விதத்திலும் தவறு இல்லை. தலை, சருமம் போன்றவற்றுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய இந்த கற்றாழை முற்றிய பின்பு பறிக்கப் பறிக்கத் தான் மீண்டும் அது புதிதாக வளரத் துவங்கும். நல்ல இட வசதி உள்ள இடங்களில் கற்றாழையை வளர்த்தால் செழிப்பாக வளரும். வீட்டிற்குள் வைத்து கூட காற்றை சுத்தப்படுத்த இதனை வளர்க்கலாம். வாஸ்து தோஷங்கள் நீங்கவும், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கவும் பயன்படும் இந்த கற்றாழை எப்பொழுதும் அதிர்ஷ்டத்தை தடை செய்வது இல்லை.

- Advertisement -