கற்றாழை செடியை வீட்டில் வளர்க்கக் கூடாதா? ஏன்? கற்றாழையை வீட்டில் வளர்ப்பதால் என்ன நேரும் தெரியுமா?

katrazhai-aleo-vera
- Advertisement -

கற்றாழை செடியை முந்தைய காலத்தினர் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறி வந்தனர். கற்றாழை செடியை ஏன் வீட்டில் வளர்க்க கூடாது? அதனால் என்ன நேரும்? என்பதையும் அவர்கள் சொல்லி வந்தனர். கற்றாழையில் இருக்கக் கூடிய மர்மங்கள் என்னென்ன? அந்த செடியை வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கற்றாழைச் செடியில் இருக்கக் கூடிய நற்குணங்கள் ஏராளம்! ஆரோக்கிய ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அதிக அளவு பயன்படுத்தப்படும் இந்த கற்றாழையில் நன்மை தரும் மூலக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் தான் இதை அதிக அளவு வளர்த்தும் வருகின்றனர். ஆனால் வீட்டில் இதை வளர்க்க கூடாது என்பதற்கு காரணம் என்ன? மற்ற செடிகளை போல கற்றாழை அதிக அளவிற்கு கிளைகளை பரப்புவது கிடையாது. ஒரு அளவிற்கு மேலே அது இன்னொரு செடியாக வேர் விட ஆரம்பிக்கும். அருகருகே புதர் போல வளர துவங்கிவிடும். இதனால் விஷ ஜந்துக்கள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு என்பதால் தான் அந்த காலங்களில் வீட்டில் கற்றாழையை வளர்க்கக் கூடாது என்று தடுத்து வந்தனர்.

- Advertisement -

ஆனால் உண்மையில் கற்றாழையில் இருக்கக் கூடிய சத்துக்கள் பல விஷயங்களுக்கு நமக்கு பயன்படும் அருட்கொடையாக இருக்கிறது. திருஷ்டிகள் கழிக்க கற்றாழையை வேருடன் பிடுங்கி வீட்டு வாசலில் தொங்க விடுவதை பார்க்கலாம். கற்றாழையில் எதிர்மறை சக்திகளையும், துஷ்ட சக்திகளையும் ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு என்று ஆன்மீகத்தில் நம்பப்படுகிறது. அதனால் தான் வீட்டு வாசலில் கற்றாழையை தொங்க விடுகின்றனர். அது நீண்ட நாட்கள் காற்றை மட்டுமே உட்கொண்டு அப்படியே இருப்பதையும் காண முடியும். கற்றாழையை தொங்கவிட்ட உடன் வாடி போனால் அந்த வீட்டில் துஷ்ட சக்திகள், கண் திருஷ்டிகள் இருப்பதாக புரிந்து கொள்ள முடியும்.

இதே போல் ஆகாச கருடன் கிழங்கையும் கட்டி தொங்க விட்டால் அது பச்சை பசேலென வேர் விட துவங்கும். அப்படி அல்லாமல் வாடி போனால் துஷ்ட சக்திகள் இருப்பதாக சொல்லுவார்கள். கற்றாழையில் விஷத்தன்மை இருப்பதாகவும், முட்கள் அதிகம் காணப்படுவதாலும் கைகளுக்கு எட்டாதவாறு வைப்பது நல்லது. வீட்டு வாசலில் முன்புறத்தில் கற்றாழையை தொட்டிகளில் வைக்கலாம். இதனால் திருஷ்டிகள் கழிவதோடு, அசுத்த காற்றையும் அதை ஈர்த்து வைத்துக் கொள்ளும், சுத்தமான காற்றை கொடுக்கவும் உதவும்.

- Advertisement -

கற்றாழையை வீட்டிற்கு வெளியே மட்டும் அல்லாமல் வீட்டிற்குள்ளேயே வளர்க்கவும் செய்வார்கள். இது கெட்ட காற்றை ஈர்த்துக் கொள்வதால், வீட்டிற்குள் வைப்பது சுத்தமான ஆக்சிஜனை கொடுக்க ஏதுவாக இருக்கும். கற்றாழையை வீட்டிற்குள் வைப்பவர்கள் படர்ந்து விரிந்து காணப்படும் கற்றாழையாக இல்லாமல், குறுகிய சிறிய கற்றாழையாக வைத்துக் கொள்ளலாம். கற்றாழையை மோருடன் சேர்த்தும் சாப்பிடுவார்கள். கற்றாழை ஜூஸ் கூட செய்து சாப்பிடுவது உண்டு.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தையும் முழுமையாக போக்க வாரம் ஒருமுறை இதை தொடர்ந்து செய்தாலே போதும்.

இப்படி உடலுக்கு உள்ளே அல்லது சருமத்திற்கு கற்றாழையை பயன்படுத்துபவர்கள் அதை ஏழிலிருந்து எட்டு முறை சுத்தமான தண்ணீரில் அலசிய பின்பு பயன்படுத்த வேண்டும். கற்றாழையில் விஷத்தன்மை காணப்படுவதால் இது போல ஏழெட்டு முறை அலசிய பின்பு பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள். கற்றாழையில் பூக்கள் பூத்தால் அது அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு அம்சமாக கருதப்படுகிறது. வீட்டில் நல்ல காரியங்கள், விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே இத்தகைய கற்றாழையை புதர் போல படரவிடாமல் வீட்டில் அழகாக தொட்டியில் வளர்த்து அனைவருமே பலன் பெறலாம்.

- Advertisement -