வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தையும் முழுமையாக போக்க வாரம் ஒருமுறை இதை தொடர்ந்து செய்தாலே போதும்.

Kan thirusti neenga
- Advertisement -

கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம்

நாம் புதிதாக ஏதாவது ஒரு செயலை செய்கிறோம் என்றால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதை நாம் கண் திருஷ்டி என்று சொல்கிறோம். கண் திருஷ்டியால் நமது வாழ்க்கையே கஷ்டமான சூழ்நிலைக்கு மாறிவிடும் என்பதால் தான் நம் முன்னோர்கள் “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது” என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கண் திருஷ்டி நம் வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக செய்யக்கூடிய மிகவும் எளிமையான மூன்று பரிகாரங்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கண் திருஷ்டி நீங்க சாம்பிராணி

வீட்டில் நாம் தூபம் போடுவதன் மூலம் ஆன்மீக ரீதியாக ஏராளமான நன்மைகள் உண்டு. அந்த தூபத்தில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் கண் திருஷ்டியானது நமது வீட்டில் இருந்து முழுமையாக அகன்றுவிடும். அந்த வகையில் நாம் தூபம் போடும்போது அதில் சமித்து குச்சியை சேர்க்கவேண்டும். இந்த சமித்து குச்சி ஹோமங்களில் உபயோகப்படுத்தப்படும் குச்சியாகும்.

- Advertisement -

சமித்து குச்சி பொதுவாகவே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த சமித்து குச்சியோடு சேர்த்து வெள்ளை குங்கிலியம், பால் சாம்பிராணி மற்றும் மருதாணி விதையை ஆகியவற்றையும் சாம்பிராணி போட பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி நாம் முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் கிடைக்கும்.

கண் திருஷ்டி நீங்க படிகார கல்

பொதுவாக கண் திருஷ்டிக்காக படிகார கல்லை கருப்பு கயிறால் கட்டி வாசலில் தொங்கவிட்டு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இந்த படிகார கல்லானது எதிர்மறை அலைகளை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு நேர்மறை அலைகளை மட்டுமே அனுப்பும் என்பதால் தான் படிகாரக் கல்லை வாசலில் தொங்க விடுகிறோம்.

- Advertisement -

இந்த படிகார கல்லை வாசலில் தொங்க விடுவதற்கு பதிலாக நம் வீட்டு வரவேற்பறையில் யாருடைய கண்ணிலும் படாத அளவிற்கு இதை தரையில் வைக்கலாம். உதாரணத்திற்கு இதை சோபாவிற்கு அடியில் இருப்பது போல் வைக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதை தரையில் தான் வைக்க வேண்டும். இதனால் நம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நபரின் எதிர்மறை அலைகளை இந்த படிகார கல் முழுமையாக ஈர்த்துவிடுகிறது. ஆதலால் அவர்களால் நமக்கு ஏற்படக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் ஏற்படாத வண்ணம் இந்த படிகார கல் நம்மை பாதுகாக்கிறது என்றே கூறலாம்.

கண் திருஷ்டி நீங்க கல் உப்பு

கண்திருஷ்டியை நீக்கக்கூடிய சக்தி கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்திற்கு தனித்தனியாகவே உண்டு. ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து சில செயல்களை செய்யும்போது கடுமையான திருஷ்டி கூட நொடியில் போகும். இதற்காக ஒரு மண் மாண்டத்தை எடுத்துக்கொண்டு அதில் 1/4 அளவு கல் உப்பை உங்கள் கைகளால் போடுங்கள். அப்படி போடும்போது உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, எங்கள் வீட்டில் இருக்கும் திருஷ்டிகள் அனைத்தும் விலகவேண்டும் என்று கூறிக்கொண்டே போடுங்கள்.

பிறகு அந்த மண் பாண்டத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை போடுங்கள். எலுமிச்சையை போடும்போதும் மேற்கூறியவாறு குலதெய்வத்தை வேண்டுங்கள். இதன் பிறகு அந்த மண் பாண்டத்தை ஒரு வெள்ளை துணியால் மூடி, நூலை கொண்டு கட்டி விடுங்கள். பிறகு இதை வீட்டின் வரபேற்பறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் எப்படிப்பட்ட திருஷ்டியும் அகலும். மண் பாண்டத்தில் உள்ள கல் உப்பு மற்றும் எலுமிச்சையை மாதம் ஒருமுறை மாற்றினால் போதும். இந்த உப்பை கரைத்து கீழே கால்வாயில் ஊற்றிவிடலாம். எலுமிச்சையை கால் படாத இடத்தில் போட்டுவிடலாம்.

மேலும் அமாவாசை தினங்களில் ஊர் காவல் தெய்வங்களான அய்யனார், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, காளியம்மன் போன்ற தெய்வங்களை தொடர்ந்து வழிபடுவதன் மூலம், நம்மிடம் இருக்கும் கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகிவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -