இந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்! அதெப்படி?

katrazhai-vellam-cash

வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கும் முதல் பிரச்சனை, பணப்பிரச்சனை தான் இருக்கும். பணப்பிரச்சினை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பணப்பிரச்சனை தீர பல வழிகள் இருந்தாலும் அதில் இந்த வழி மிகவும் எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒரு செடி வீட்டில் கட்டாயம் எல்லோரும் வளர்ப்பது அவசியமாக இருக்கிறது. அது என்ன செடி என்பதையும்? அதன் மூலம் எப்படி நம்முடைய பணப்பிரச்சனை தீரும்? என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

money

இந்தச் செடி அற்புதமான மூலிகை வகையை சார்ந்தது. அந்த காலத்தில் நமது முன்னோர்கள் தொடங்கி, இந்த காலத்தில் நம்முடைய சந்ததியினர் வரை அந்தச் செடியை வளர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கும், முகப்பொலிவிற்கு, உடல் ஆரோக்கியத்திற்கும் கூட அருமருந்தாக இந்தச் செடி இருந்து வருகிறது. இதற்காக மட்டும் இல்லங்க! இந்தச் செடி வாஸ்து தோஷம் போக்கும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

வீட்டில் வாஸ்து பிரச்சினை இருந்தால் பணப் பிரச்சினையும் இருக்கும் என்பார்கள். அத்தகைய பணப் பிரச்சனையை தீர்க்க வீட்டில் அனைவரும் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். கற்றாழைச் செடியின் மருத்துவ பயன்களை நாம் அறிவோம். அதை விட இந்தச் செடி வாஸ்து தோஷத்தை போக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வாஸ்து முறைப்படி கற்றாழைச் செடியை ஒரு சில விஷயங்கள் செய்தால் வீட்டில் பணப் பிரச்சனை முற்றிலுமாக தீர்ந்து விடுமாம். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா?

katralai

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரே ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் கற்றாழை செடிக்கு ஊற்றுங்கள். இது முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம். திங்கள் கிழமை அன்று இரவு வெல்லம் சிறிதளவு ஒரு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அதை மறுநாள் காலையில் செவ்வாய்க் கிழமை அன்று கற்றாழை செடிக்கு ஊற்றுங்கள். அதே போல் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு லிட்டர் தண்ணீரில் தேன் ஒரு ஸ்பூன் விட்டு கலந்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் புதன்கிழமை அன்று உங்கள் கற்றாழை செடிக்கு அதை அப்படியே ஊற்றுங்கள்.

- Advertisement -

இப்படி மூன்று நாட்கள் மூன்று வாரங்கள் செய்து வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனை தீரும். வாஸ்துவிற்கு கற்றாழை செடி மிகவும் உபயோகமான செடியாக இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் சிறு சிறு வாஸ்து குறைகளை நீக்க கற்றாழை செடி போன்ற ஒரு சில செடி வகைகளை வளர்த்து வந்தாலே போதும். இந்த பரிகாரம் எல்லா வகையான பண பிரச்சனையை தீர்க்குமா? என்பது தெரியாது. ஆனால் வாஸ்துவினால் இருக்கும் பணப்பிரச்சனையை கட்டாயம் தீர்க்கும் என்கிறது வாஸ்து ஜோதிடம்.

Jeeragam water benefits in Tamil

சீரகம், வெல்லம், தேன் இந்த மூன்றும் வாஸ்து தோஷம் போக்கும் மூலிகை வகை ஆகும். இவற்றை கற்றாழை செடியில் ஊற்றி வருவதன் மூலம் தீராத பிரச்சினைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரித்த நிலையில், திடீரென கையில் காசு இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். அதற்கு முக்கிய காரணம், வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனை தான். ஒரு சில பொருட்களை ஒரு சில விஷயங்களை வாஸ்துவின்படி அதற்கேற்ற திசையில் தான் வைக்க வேண்டும். அதை நீங்கள் மாற்றி வைத்தால் பண பிரச்சனை வரும். அது போன்ற சூழ்நிலையில் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்டம் தரக்கூடிய இந்த 1 படத்தை இப்படி மாட்டி வைத்தால் மேலும் அதிர்ஷ்டசாலி ஆகி விடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.