காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?

kattuyanam-rice2
- Advertisement -

அந்த காலங்களில் எல்லாம் மூன்று போகமும் விவசாயமும், ஏக்கர் கணக்கில் தோட்டங்கள் என்று விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். பல தலைமுறையினருக்கு முந்தைய மன்னர்கள் காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் பல வகையான அரிசிகள் செழித்து வளர்ந்தன. நம் நாட்டில். பலரால் மறைக்கப்பட்ட இந்த அரிசிகள் இன்றளவிலும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கின்றன.

ஆனால் அது புழக்கத்தில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. இந்த மாதிரியான அரிசிகளை சாப்பிட்டால் தீராத உடல் பிரச்சினைகளை வருமுன் காக்கலாம் அல்லது வந்தவற்றையும் விரட்டி அடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சக்தி மிகுந்த அரிசி தான் இது! இது என்ன அரிசி? எப்படி இதை சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

சுமார் ஏழு அடிக்கும் உயர்வாக செழித்து வளரக் கூடிய இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூடியது என்பதால் இதன் பெயர் ‘காட்டு யானம் அரிசி’ என்று வந்தது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிசியான இந்த காட்டுயானம் அரிசி அரிதாக கிடைக்கக் கூடியது. இதை ஆன்லைனில் கூட இப்போது ஷாப்பிங் செய்யக்கூடிய வகையில் இருக்கின்றது.

சக்தி வாய்ந்த இந்த காட்டுயானம் அரிசியின் விலை சற்று அதிகம் என்றாலும் இதை கஞ்சி வைத்து ஒரு மண்டலம் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் முற்றிலும் கட்டுப்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியில் சாதத்தை சமைத்து, கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து அப்படியே மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படும்.

- Advertisement -

காட்டு யானம் அரிசி சாதம் செய்முறை விளக்கம்:
காட்டுயானம் அரிசி சாதமாக செய்ய சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அரிசி கடினமாக இருப்பதால் வேகுவதற்கு கூடுதல் கவனம் தேவை. ஆறிலிருந்து 12 மணி நேரம் வரை நீங்கள் இந்த அரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அரைத்து கஞ்சியாக குடிக்க வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் ஊற வைக்கலாம். சாதமாக வடித்து சாப்பிட வேண்டும் என்றால் 12 மணி நேரம் ஊற வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தீராத தலைவலிக்கு வீட்டிலேயே சட்டுன்னு செய்யக்கூடிய விஷயம் என்ன? இது செஞ்சா தலைவலி உடனே தீருமா?

ஊற வைத்து எடுத்த அரிசியில் நான்கு பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வையுங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பை குறைவான தீயில் வைத்து மீண்டும் 7-லிருந்து 8 விசில் வரை விட்டு எடுங்கள். சாதம் பூ போல மலர்ந்து நன்கு வெந்து வந்திருக்கும். இந்த சாதத்துடன் நீங்கள் வழக்கமான குழம்பு, கூட்டு வைத்து சாப்பிடலாம் அல்லது தயிர், பச்சை மிளகாய் வைத்து கஞ்சியாகவும் குடிக்கலாம். இந்த அரிசியில் இட்லி, தோசை, கிச்சடி கூட செய்வது உண்டு. அடிக்கடி இதை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கும் காட்டு யானை போல நல்ல ஒரு பலம் உண்டாகும்.

- Advertisement -