நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தேவைகளையும் நாம் பூர்த்தி செய்வதற்காக இறைவழிபாட்டை நாம் மேற்கொள்வோம். அப்படி இறைவழிபாட்டை மேற்கொள்ளும்போது அந்த கடவுளுக்கு உகந்த பாடல்களையும், மந்திரங்களையும் உச்சரிப்போம். ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் இருக்கும். அந்த பலன்களை தெரிந்துகொண்டு அந்த பாடல் மற்றும் மந்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டு நாம் உச்சரித்தோம் என்றால் நமக்கு தேவையான அனைத்தையும் நம்மால் பெற முடியும். அவை அனைத்தும் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் அந்த கடவுளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்முடைய வாழ்க்கையை வளமாக்க எந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப்போகிறோம்.
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருக்கின்றன. அந்த தெய்வங்கள் அனைத்திற்கும் பலவிதமான மந்திரங்களும், பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய முன்னோர்களும், ஆன்மீகவாதிகளும் இந்த பாடலை இந்த நேரத்தில் இப்படி பாடினால் இந்த பிரச்சனை சரியாகும் என்று கூறியிருக்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரவும், சகல ஐஸ்வரியம் பெருகவும் தினமும் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். செய்வினை தோஷங்கள், கர்ம வியாதிகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் சுதர்சன கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அஷ்டலட்சுமி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுமந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும், புத்திர பாக்கியம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்தான கோபால கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீலா சரஸ்வதி கலசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் நரசிம்ம கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். மனை தோஷம் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சகல தோஷங்களும் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ காமாட்சி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
கிரகங்களின் தோஷங்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் ருத்ர கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ தேவி கருமாரி துதியை பாராயணம் செய்ய வேண்டும். நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். சகல காரிய வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க நெய் தீப வழிபாடு
நம்முடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு எந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு முழு மனதுடன் தினமும் முழு நம்பிக்கை வைத்து பாராயணம் செய்ய நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும்.