பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று அந்த காலத்திலேயே பழமொழி கூறி வைத்து விட்டார்கள். அப்பொழுதே அப்படி என்றால் இந்த காலத்தில் சொல்லவா வேண்டும்? பணம் இல்லாமல் எங்கும் நம்மால் செல்ல முடியாது எதையும் நம்மால் செய்ய முடியாது. ஏன் ஒரு அணுவை கூட அசைக்க முடியாது. அந்த அளவிற்கு பணமானது முக்கியத்துவம் வாய்ந்து விட்டது.
அப்படிப்பட்ட பணத்தை நம்முடைய செலவை விட அதிக அளவு சம்பாதிக்க வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரவு குறைவாக இருந்தாலும் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலை மாறி பண வரவு அதிகரிப்பதற்கு எந்த நாளில் எந்த நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வியாழக்கிழமை இதை மட்டும் பண்ணுங்க பணம் சேர
செல்வத்தை வாரி வழங்குவதற்கு என்று சில கிரகங்கள் இருக்கின்றன. அதேபோல் சில தெய்வங்களும் இருக்கின்றன. இந்த தெய்வங்களையும் கிரகங்களையும் நம் முறையாக சூட்சுவமான வடிவத்தில் நாம் வழிபடும் பொழுது நம்முடைய பணவரவு என்பது அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அப்படிப்பட்ட தெய்வங்களை வழிபடுவதற்கு பெரிய வழிமுறைகள் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்தால் போதும். அந்த வகையில் எந்த கிரகத்திற்காக நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவு உண்டாகும் என்று பார்ப்போம்.
செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய கிரகங்கள் என்று பார்க்கும் பொழுது அது சுக்கிர பகவான் மற்றும் குருபகவான் தான். சுக்கிர பகவான் என்பவர் அன்றாடம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டும்தான் பணத்தை தருவார். ஆனால் குரு பகவான் நம்முடைய தேவையை விட அதிகமான அளவு பணத்தை தரக்கூடியவர். அப்படிப்பட்ட குரு பகவானிற்குரிய கிழமையாக திகழக் கூடாதுதான் வியாழக்கிழமை.
இதே வியாழக்கிழமை தான் பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரருக்குரிய கிழமையாகவும் திகழக்கூடியது. இதோடு மட்டுமா நமக்கு நன்மைகளை மட்டுமே கற்றுத்தருபவர்களாக திகழக்கூடியவர்கள் தான் குருமார்கள். இந்த குருமார்களை வழிபடக்கூடிய கிழமையாகவும் வியாழக்கிழமை திகழ்கிறது.
அப்படிப்பட்ட வியாழக்கிழமை அன்று தான் நாம் பணவரவு அதிகரிப்பதற்கு தீபம் ஏற்ற வேண்டும். வியாழக்கிழமை தீபம் ஏற்ற வேண்டும். சரி, எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்ற கேள்வி வருகிறது அல்லவா? குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்குரிய ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளோ அல்லது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளோ நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
இரவு வரக்கூடிய குரு ஹோரையில் நெய் தீபம் ஏற்ற வேண்டாம். காரணம் சூரியன் உதயமாகி இருக்கும் பொழுது ஏற்றுவது தான் நல்ல பலனைத் தரும். இந்த தீபத்தை எங்கே ஏற்ற வேண்டும் என்ற கேள்வி அடுத்து வரும். இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் தான் ஏற்ற வேண்டும். வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையலறை அறையிலோ வடக்கு பார்த்தவாறு ஏற்றினால் போதும். நெய்யானது நாம் சாப்பிட பயன்படுத்தும் சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். கடைகளில் தீபம் ஏற்றுவதற்காக உபயோகப்படுத்தும் நெய்யை உபயோகப்படுத்தாதீர்கள். அதனால் எந்தவித பலனும் கிடைக்காது.
இதையும் படிக்கலாமே: காரிய வெற்றி ஏற்பட வேர் பரிகாரம்
ஒரே ஒரு நெய் தீபத்தை வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டும் நம்முடைய வீட்டில் நாம் ஏற்றி வைப்பதன் மூலம் நம்முடைய பணவரவை அதிகரிக்க முடியும் என்னும் பட்சத்தில் அதை முயற்சி செய்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே. நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.