தோனியே என்னை முழுமையான கிரிக்கெட்டராக மாற்றினார் – இந்திய அணி நட்சத்திர வீரர்

msd

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரில் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

dhoni

இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கேதார் ஜாதவ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

நான் தற்போது ஒரு முழுகிரிக்கெட் வீரராக உணர்கிறேன். மேலும் என்னால் பின்வரிசையில் சிறப்பாக விளையாடவும் மற்றும் பகுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசவும் முடிகிறது. இதற்கு முழுக்காரணம் தோனி அவர் தான் என்னை சந்தித்த முதல் போட்டி முதல் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி என்னை சிறப்பாக விளையாடவைக்கிறார்.

jadhav

நான் பந்துவீசும்போது எங்கு பந்துவீச வேண்டும், எவ்வளவு வேகத்தில் வீசவேண்டும் என்று கூறுவார். அதைப்போன்று பேட்டிங் செய்யும்போது சில அறிவுரைகளை வழங்கி என் ஆட்டத்தினை மேம்படுத்த உதவுகிறார். இன்று நான் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக இருக்க காரணம் நிச்சயம் தோனி தான். வரும் உலகக்கோப்பை போட்டிகளில் நான் தோனியுடன் விளையாட ஆசைப்படுகிறேன் என்று ஜாதவ் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை – இந்திய அணி சாதனை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்