தினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்! நிகழும் அதிசயத்தை பாருங்கள்!

பூஜை அறையில் நாம் அன்றாடம் நீரை வைப்பதன் மூலம் நிகழும் அதிசயம் மற்றும் அதனால் உண்டாகும் நன்மைகளை பற்றி ஆன்மீக ரீதியாக இப்பதிவில் காண உள்ளோம்.

அனைத்தும் உயிர்களும் வாழ எப்படி சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது தாகத்தை தீர்க்கும் தண்ணீர் முக்கியம். தண்ணீர் நமது தாகத்தை தனிப்பது மட்டுமில்லாமல் நமக்கு பல்வேறு வகைகளிலும் தண்ணீர் பயன்படுகின்றது. ஆன்மீக சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று எல்லாருக்குமே தெரியும். நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் நீரின் மூலம் நமக்கு ஏற்படும் நிறைய பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு ஒரு மண் குடுவையில் சிறிது நீரை எடுத்து உங்கள் பூஜை அறையில் வையுங்கள். நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு அன்புடன் கையெடுத்து வணங்கி உங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்து அதன் பிறகு காலை உணவை உண்ட பிறகு அந்த நீரை அதாவது நீங்கள் பூஜை அறையில் வைத்த அந்த மண் குடுவையில் உள்ள நீரை அருந்த உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நீங்கள் வேண்டிய அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும்.

அதாவது அந்த நீரை நீங்கள் அருந்துவதால் நீங்கள் வெளியில் போகும் பொழுது எந்த வேலையும் உங்களுக்கு வெற்றியை தரும். நீங்கள் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும் . நாம் வீடுகளில் வளர்க்கும் துளசிச் செடியும் கூட வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் பெண்கள்  கைகளால் அந்த துளசி செடிக்கு நீர் ஊற்றி வர பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இதை தினமும் செய்யலாம் ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் கண்டிப்பா செஞ்சு பாருங்க நிறைய நன்மைகள் உங்களை தேடி வரும் துளியும் சந்தேகமில்லை இந்த மாதிரியான நிறைய குறிப்புகள் நம்முடைய முன்னோர்கள் குருமார்கள் நமக்காக கூறியுள்ளார்கள்.